skip to main | skip to sidebar

Tuesday, March 15, 2011

நிறுத்தப்பட்ட அளவில்லா பயன்பாடு !!!!!!!

                                பு
திதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3G இன்டர்நெட் சேவையில் BSNL நிறுவனம் அளவில்லா இணையப் பயன்பாட்டை வழங்கிக் கொண்டிருந்தது . இந்த 3G - இன் மூலம் நாம் அளவில்லா சேவையை பெறலாம் .இதை பயன்படுத்தி கொண்டிருந்த பலர் படம்,பாட்டு,விளையாட்டு என தரவிறக்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இதன் வேகம் மிகவும் இன்றியமையாதது இதன் மூலம் நாம் எதையும் செய்யலாம் .

              இப்பொழுது மிக அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறது BSNL அது என்னவென்றால் தனது இன்டர்நெட் சேவையில் அளவில்லப் பயன்பாட்டை நிறுத்தியிருக்கிறது என்பது தான் .


                       2G மற்றும் 3G அலைக்கற்றை வரிசையில் பயன்பாட்டில் இருந்த அனைத்து திட்டங்களும் தற்போது அளவுப்பயன்பாடாக மாற்றப்பட்டுள்ளன !!!.

இதற்கு முன்னர் போஸ்ட்பெய்டில் 1359 ரூபாய்க்கும் பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் 1459ரூபாய்க்கும் அளவில்லா இணையப் பயன்பாட்டை பெற்று வந்தனர் . இப்பொழுது இவை இரண்டுமே அளவுப் பயன்பாடாக மாறிவிட்டன. 
               
                கட்டண விகிதம் 10 கேபிக்கு 0.02 ரூபாயாக கணக்கிடப்பட்டு அளவைத் தாண்டி விட்டால் அதற்கேற்ப கூடுதலாக பணம் வசூலிக்கப்படும் .
             
                         BSNL இன் இந்த அதிரடியான முடிவை கண்டு பலரும் வேறு ஒரு சேவைக்கு மாறினாலும் ஆச்சிரியபடுவதற்கு இல்லை .


!!!! மறக்காமல் வாக்களியுங்கள் !!!!












1 comments:

  1. ஹ்ம்ம்... உன்னைபோன்ற புது மூளைகள் தான் தமிழுக்கு தேவை... இதே போல் மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை தமிழில் மொழி பெயர்த்து வழங்கு... உன் சேவை தொடரட்டும்...

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets