skip to main | skip to sidebar

Monday, July 25, 2011

மெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ ! ! !

இணையம் என்பது இந்த உலகில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது . நாம் அனைவரும் இணையத்தில் உலாவுவதை தான் மிகவும் விரும்புகிறோம் . அனைவரும் அவரது சமூக வாழ்கையிலும் மற்றும் நடைமுறை வாழ்கையிலும் இணைவதற்கு இணையம் இன்றியமையாததாக மாறிவிட்டது.அதனால் அனைவருக்கும் வேகமான இணைப்பு வேண்டும் என்று தான் ஆசை படுகின்றனர்.

இப்போது பல தொலைபேசி நிறுவனங்களும் பல வகையான இணைய இணைப்பை தருகின்றனர்.இப்பொழுது பல நிறுவனங்களும் இணைய இணைப்பை வேகமாக்குவதர்க்கு பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். எனவே இன்று நாம் நீங்கள் ஒரு மெதுவான இணைப்பில் இணையத்தை வேகமாக அணுகுவது எப்படி என்பதை பற்றி பேசுவோம்.

இணையத்தை வேகமாக அணுக இரண்டு வழிகள்

1.கூகிள் ஸ்லைசர் :

இந்த கூகிள் ஸ்லைசர் என்ன செய்கிறது என்றால் உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள படங்களை தவிர்க்கிறது ( நீங்கள் விருப்ப பட்டால் )அதனால்உங்கள் வலைப்பக்கம் இலகுவாக மாறுகிறது இதனால் நீங்கள் விரைவாக அந்த பக்கத்தை பார்வையிடலாம்.







தளத்திற்கு செல்ல : சுட்டி

2.TCP Optimizer :

TCP Optimizer ஒரு இலவச மென்பொருள் இது விண்டோஸ் இயங்குதளத்திற்காக உருவாக்கப்பட்டது இது உங்கள் கணினியின் இணைய இனைப்பை வேகமாக்கும்.இதை பதிவிறக்கி அதை ரன் செய்யவும்.அதற்க்கு முன்னர் உங்கள் இணைய உலாவிகளை மூடிக் கொள்ளவும்.

இதை பதிவிறக்க : TCP OPTIMIZER

இதை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பயன்படுத்துபவராக இருந்தால் அதை வலது கிளிக் செய்து "RUN AS ADMINISTRATOR" என்பதை தேர்வு செய்யுங்கள் மற்ற இயங்குதளத்தில் நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள் பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.




அதில் உங்கள் பரோட் பேண்ட் கணக்கின் வேகத்தை(512KBPS,1MBPS,ETC) குறிப்பிடுங்கள் பின்னர் அதில் MODIFY ALL NETWORK ADAPTERS என்பதை தேர்வு செய்யுங்கள் பின்னர் கீழே OPTIMAL என்பதையும் கிளிக் செய்து விட்டு APPLY CHANGES என்ற பொத்தானை அழுத்தவும்.பின்னர் வரும் விண்டோவில் OK வை அழுத்தவும்.

உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள் . பின்னர் WWW.SPEEDTEST.NET என்ற வலைப்பக்கத்திற்கு சென்று உங்கள் இணையத்தின் வேகத்தை சோதித்து பாருங்கள் . TCP OPTIMIZER-ரை பயன்படுத்தும் முன்னும் உங்கள் இணைய வேகத்தை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.



இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்













3 comments:

  1. நல்ல தகவல் நன்றி.

  2. படித்ததற்கு நன்றி நண்பரே ! !

  3. nantri nanbare

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets