குறுஞ்செய்தி என்பது என்பது நம்மை எந்த அளவு ஈர்த்து விட்டது என்றால் கைபேசியில் மெயின் அகௌன்ட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ குறுஞ்செய்திக்கு மட்டும் பணம் இருக்கிறது அந்த அளவுக்கு நாம் அதை நேசிக்கிறோம் .
சரி விசயத்துக்கு வருவோம் நாம் அனைவரும் குறுஞ்செய்தி அனுபிக்கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் அனைவரும் ஆங்கிலத்தில் தான் பொதுவாக அனுப்புகின்றோம்.
சில கைபேசி நிறுவனங்கள் நாம் குறிப்பிட்ட சில மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு அனுமதிக்கின்றன.ஆனால் நாம் விரும்பிய மொழிகளில் நாம் அனுப்ப முடியாது.
இதோ ஒரு மென்பொருள் உங்கள் கைபேசிக்கு நீங்கள் விரும்பிய இந்திய மொழிகளில் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
இதை பதிவிறக்க : பாணினி கீபேட்
மேலே உள்ள தளத்தில் உங்கள் கைபேசிக்கு ஏற்றவாறு உங்கள் மொழியை தேர்வு செய்து அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யது கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை படுத்துவது மிக எளிதான ஒன்று இதில் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டாசு செய்ய தேவை இல்லை நீங்கள் சாதரணமாக உங்கள் மொழியிலே தட்டசு செய்யலாம்.
இந்த மென்பொருள் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்க பட்டுள்ளது அதனால் நாம் அதிகமாக உபயோகிக்கும் எழுத்துக்களை அது முதலில் வைத்திருக்கும் .இந்த மென்பொருள் ஜாவா மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது.
உங்கள் கைபேசிக்கு இந்த மென்பொருள் வேலை செய்யுமா ?
.
|
1 comments:
நன்றி நண்பரே
Post a Comment
நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....