skip to main | skip to sidebar

Saturday, July 30, 2011

கூகுளில் சுலபமாக தேடுவதற்கு சில நுணுக்கங்கள்

1 comments
இணையம் என்று வந்துவிட்டால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது கூகிள் தான். கூகிள் நிறுவனம் நிறைய சேவைகளை நமக்கு இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் இதன் தேடு இயந்திரத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த தேடியந்திரத்தின் மூலம் நாம் எந்த வகையான கோப்புகளையும் தகவல்களையும் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால் நாம் தேடுவதற்கு கொடுக்கும் சொற்கள் தான் மிக முக்கியம் அதை நாம் மிக கவனமாக கொடுக்க வேண்டும்.கூகுளில் சுலபமாக தேடுவதற்கு சில நுணுக்கங்கள் இருக்கிறது அதை பற்றி நாம் பார்ப்போம் .

1.SITE :

இந்த குறிச்சொல் மூலம் நாம் குறிப்பிட்ட தளத்தில் மட்டும் நமக்கு வேண்டிய தகவலை தேடலாம். இப்பொழுது நீங்கள் நமது வந்தேமாதரம் தளத்தில் முகபுத்தகம் சம்மதமான பதிவுகளை தேட கீழே உள்ளவாறு சொடுக்குங்கள்


facebook site:vandhemadharam.com

இதை பற்றி ஏற்கனவே நண்பர் சசிகுமார் அவரது வலைப்பூவில் பகிர்ந்துள்ளார் 

2.FILE TYPE :

இந்த குறிச்சொல் மூலம் நாம் குறிப்பிட்ட வடிவத்தில் உள்ள கோப்புகளை மட்டும் இணையத்தில் தேடலாம் . இப்பொழுது நீங்கள் ஹாக்கிங் பற்றிய PDF கோப்பினை தேடுவதற்கு கீழே உள்ளதை போல சொடுக்குங்கள்.

hacking:pdf

இந்த PDF -க்கு பதிலாக உங்களுக்கு வேண்டிய வடிவத்தை கொடுங்கள் . நீங்கள் வீடியோ வடிவத்தை கொடுத்து கூட தேடலாம் AVI, MPEG, FLV போன்றவற்றை  உள்ளீடு செய்து தேடுங்கள் .

3.INURL :

இந்த குறிச்சொல் மூலம் நாம் குறிப்பிட்ட URL-ஐ தேடலாம் . நீங்கள் கொடுக்கும் குறிச்சொல் இருக்கும் இல்லா URL-யும் கூகிள் பட்டியலிடும். நீங்கள் LOGIN பக்கத்தை தேட கீழே உள்ளதை போல சொடுக்கவும்.

inurl : Login

4.INTITLE : 

இந்த குறிச்சொல் மூலம் நாம் குறிப்பிட்ட தலைப்பில் உள்ள பக்கத்தை நாம் தேடலாம்.எந்த பக்கத்தின் தலைப்பில் உங்கள் சொல் இருந்தாலும் உடனே அதை பட்டியலிட்டு விடும் கூகிள் . நீங்கள் ஹாக்கிங் பற்றிய பக்கங்களை தேட 

intitle:Hacking

5.DEFINE : 

இந்த குறிச்சொல் மூலம் நாம் சொற்களின் பொருளை தேடலாம் . இந்த குறிச்சொல் அகராதி போல செயல்படுகிறது.

define:Hacker

முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் இந்த குறிச்சொல்களை சேர்த்தும் தேடலாம்.

intitle:Hacking :pdf


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் 




Friday, July 29, 2011

VLC -இன் உபயோகமான ஐந்து ( 5 ) அம்சங்கள்

4 comments
VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது இந்த மென்பொருள் மூலம் நாம் அனைத்து வகையான வீடியோ கோப்புகளையும் கண்டு கழிக்கலாம். இந்த மென்பொருளில் அனைத்து வீடியோ கோடெக்களும் இருக்கிறது. மேலும் இது ஒரு இலவச மென்பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்புகின்றனர்.இந்த நிறுவனம் இப்பொழுது தான் இதன் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளது. இதை பற்றியும் இதன் பெருமைகள் பற்றியும்  அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதனால் இந்த பிளேயரில் உள்ள பயனுள்ள  சில அம்சங்களை பற்றி பார்ப்போம்.

இதை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இந்த பதிவு இதனை பற்றி அறியாதவர்களுக்கு.

1.RIP DVD's :

இந்த பிளேயரில் அடிப்படையாக ஒரு DVD ரிப்பர் உள்ளது. இதை விட சிறந்த DVD ரிப்பர்கள் நிறைய இருக்கிறது.  ஆனால் இந்த மென்பொருள் மூலம் நாம் தரமான DVD வீடியோவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .





படங்களை ரிப் செய்ய  :

        MEDIA -> CONVERT/SAVE->DISC இங்கே செல்லவும் .இங்கே  நீங்கள் ஆரம்ப நிலையை சரி செய்யலாம் மற்றும் குறிப்பிட்ட தலைப்புக்கள் அல்லது அத்தியாயங்களையும் மட்டும் RIP செய்ய முடியும். இதில் நீங்கள் கோப்பின் பெயரையும் , கோப்பை சேமிக்க வேண்டிய இடத்தையும், கோப்பின் பார்மாட்டையும் தேர்வு செய்யுங்கள் அதற்க்கு பின் SAVE பொத்தானை அழுத்தவும்.

2.வீடியோவை பதிவு செய்ய (RECORD VIDEOS) :

          நீங்கள் VLC பிளேயரில் வீடியோவை பார்க்கும்போதே அதை பதிவு செய்யலாம் .முன்னிருப்பாக பதிவு பொத்தான் மறைத்து வைக்கப்  பட்டிருக்கும். VIEW->ADVANCED CONTROL - ஐ தேர்வு செய்யவும் உடனே பதிவு பொத்தானை பார்க்கலாம். வீடியோவை பதிவு செய்யவும் பதிவு செய்வதை நிறுத்தவும் அந்த பொத்தானை அழுத்தவும் .




 அது  மட்டுமல்ல WEBCAM மூலம் நீங்களும் வீடியோவை பதிவு செய்யலாம் . இதற்க்கு MEDIA->OPEN CAPTURE DEVICE-ஐ தேர்வு செய்ய வேண்டும்.பின்னர் பதிவு பொத்தானை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

3.RAR கோப்புகளை முன்னோட்டம் பார்க்க :
                                     
                   VLC மீடியா பிளேயரில் நீங்கள் ZIP செய்துள்ள வீடியோ கோப்புகளை பார்வையிடலாம்.ஒரு படத்தை பதிவிறக்கும் போது அதை பிரித்து வைத்திருப்போம் அதில் முதல் பாதி உள்ள கோப்பை(*.part1.rar) நீங்கள் இதில் பார்வையிடலாம்.அதற்க்கு பின் மீதி உள்ள பாகங்களை அதுவே சேர்த்து நமக்கு அதை முன்னோட்டமிடும் .

4.வீடியோ மற்றும் ஆடியோ கோப்பின் பார்மேட்டை மாற்ற (VIDEO CONVERSTION) :

                    வீடியோ மற்றும் ஆடியோ கோப்புகளை மாற்ற MEDIA-> CONVERT / SAVE - ஐ தேர்வு செய்யுங்கள் பின்னர் ADD பொத்தானை அழுத்தி கோப்பினை தேர்வு செய்யுங்கள் பின்னர் CONVERT/SAVE பொத்தானை அழுத்துங்கள் அதில் கோப்பின் விவரங்களை கொடுத்து பின்னர் CONVERT பொத்தானை அழுத்துங்கள். VLC - ஐ பயன்படுத்தி நாம் வீடியோ கோப்பினை  MP4, WMV, AVI, OGG, MP3 போன்ற பல்வேறு வடிவங்களாக  மாற்றலாம் .





5. வீடியோவை தரவிறக்க (DOWNLOAD VIDEOS) :

               நீங்கள் VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவை YOUTUBE  போன்ற தளங்களில் இருந்து தரவிறக்கலாம் மற்றும் பார்க்கலாம் . பிளாஷ் பிளேயர் இல்லாத கணினிகளில் இது நமக்கு கைகொடுக்கும்  . பதிவிறக்க MEDIA->OPEN NETWORK STREAM -ஐ தேர்வு செய்யுங்கள் அதில் வீடியோவின் URL- ஐ உள்ளிடு செய்து PLAY பொத்தானை அழுத்துங்கள்.


இதை பதிவிறக்க : VLC Media Player

இந்த அளவு வசதிகள் நிறைந்து இருபதனால் தான் இதனை அனைவரும்  விரும்புகின்றனர்  என்று நினைக்கின்றேன்.


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.





Monday, July 25, 2011

மெதுவான இணைய இணைப்பில் வேகமாக உலாவ ! ! !

3 comments
இணையம் என்பது இந்த உலகில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது . நாம் அனைவரும் இணையத்தில் உலாவுவதை தான் மிகவும் விரும்புகிறோம் . அனைவரும் அவரது சமூக வாழ்கையிலும் மற்றும் நடைமுறை வாழ்கையிலும் இணைவதற்கு இணையம் இன்றியமையாததாக மாறிவிட்டது.அதனால் அனைவருக்கும் வேகமான இணைப்பு வேண்டும் என்று தான் ஆசை படுகின்றனர்.

இப்போது பல தொலைபேசி நிறுவனங்களும் பல வகையான இணைய இணைப்பை தருகின்றனர்.இப்பொழுது பல நிறுவனங்களும் இணைய இணைப்பை வேகமாக்குவதர்க்கு பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். எனவே இன்று நாம் நீங்கள் ஒரு மெதுவான இணைப்பில் இணையத்தை வேகமாக அணுகுவது எப்படி என்பதை பற்றி பேசுவோம்.

இணையத்தை வேகமாக அணுக இரண்டு வழிகள்

1.கூகிள் ஸ்லைசர் :

இந்த கூகிள் ஸ்லைசர் என்ன செய்கிறது என்றால் உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள படங்களை தவிர்க்கிறது ( நீங்கள் விருப்ப பட்டால் )அதனால்உங்கள் வலைப்பக்கம் இலகுவாக மாறுகிறது இதனால் நீங்கள் விரைவாக அந்த பக்கத்தை பார்வையிடலாம்.







தளத்திற்கு செல்ல : சுட்டி

2.TCP Optimizer :

TCP Optimizer ஒரு இலவச மென்பொருள் இது விண்டோஸ் இயங்குதளத்திற்காக உருவாக்கப்பட்டது இது உங்கள் கணினியின் இணைய இனைப்பை வேகமாக்கும்.இதை பதிவிறக்கி அதை ரன் செய்யவும்.அதற்க்கு முன்னர் உங்கள் இணைய உலாவிகளை மூடிக் கொள்ளவும்.

இதை பதிவிறக்க : TCP OPTIMIZER

இதை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பயன்படுத்துபவராக இருந்தால் அதை வலது கிளிக் செய்து "RUN AS ADMINISTRATOR" என்பதை தேர்வு செய்யுங்கள் மற்ற இயங்குதளத்தில் நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள் பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.




அதில் உங்கள் பரோட் பேண்ட் கணக்கின் வேகத்தை(512KBPS,1MBPS,ETC) குறிப்பிடுங்கள் பின்னர் அதில் MODIFY ALL NETWORK ADAPTERS என்பதை தேர்வு செய்யுங்கள் பின்னர் கீழே OPTIMAL என்பதையும் கிளிக் செய்து விட்டு APPLY CHANGES என்ற பொத்தானை அழுத்தவும்.பின்னர் வரும் விண்டோவில் OK வை அழுத்தவும்.

உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள் . பின்னர் WWW.SPEEDTEST.NET என்ற வலைப்பக்கத்திற்கு சென்று உங்கள் இணையத்தின் வேகத்தை சோதித்து பாருங்கள் . TCP OPTIMIZER-ரை பயன்படுத்தும் முன்னும் உங்கள் இணைய வேகத்தை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.



இந்த பதிவு உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்




Wednesday, July 20, 2011

FACEBOOK-இன் புதிய உரையாடல் பலகை ஒரு அலசல்

0 comments



சமூக இணையதளங்களின் ஜாம்பவானாக FACEBOOK நிறுவனம் மாறிக்கொண்டு இருக்கிறது அந்த அளவுக்கு அந்த தளத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகின்றனர் மற்றும் இந்த தளத்தை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த அளவுக்கு FACEBOOK நிறுவனம் அதன் பயனாளர்களை தன் வசப்படுத்தி வைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.  


FACEBOOK நிறுவனம் தன் தளத்தை நாளுக்கு நாள் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது இந்த தளத்தின் வாயிலாக நாம் நிறைய சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.இந்த நிறுவனம் இப்பொழுது தனது தளத்தில் சைடு பேன் மற்றும் அதன் உரையாடல் ஆகியவற்றின் தோற்றத்தை புதுபித்து உள்ளது. மற்றும் இந்த தளம் வீடியோ உரையாடலையும் தற்போது கொண்டு வந்துள்ளது இந்த சில காரணங்களாலும் இன்னும் பல காரணங்களாலும் இந்த தளம் முதன்மை பெற்று இருக்கிறது என்று கூறலாம்.

சரி விசயத்துக்கு வருவோம் முகப்புத்தகத்தில் நாம் அனைவரும் உரையாடல்களை செய்வோம் அதை பற்றியும் அதில் உள்ள சில வசிதகளை பற்றியும் தான் பார்க்க போகிறோம்.

நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கக்கூடும் . இந்த பதிவு இதனை பற்றி தெரியாதவர்களுக்கு தான்.

நாம் அனைவரும் நமது நண்பர்களுடன் உரையாடுவோம் இன்னும் சொல்ல போனால் நாம் இணையம் பயன்படுத்துவதே அதற்காகத்தானே.FACEBOOK நிறுவனம் அந்த வசதியை மிக அழகாக நமக்கு செய்து தந்துள்ளது அதில் நிறைய வசதிகளும் இருக்கிறது நாம் அதை பற்றி பார்ப்போம்.

நண்பர்களுடன் உரையாடும்போது அந்த உரையாடல் பலகையின் மேலே அமைப்பு பொத்தானை அழுத்துங்கள் அதில் சில வசதிகள் உள்ளன










இதில் முக்கியமாக இரண்டு வசதிகள் உள்ளன அவற்றை பற்றி பார்ப்போம். முதல் வசதி என்னவென்றால் SEE THE FULL CONVERSATION இந்த வசதி மூலம் நாம் அந்த நண்பருடன் எப்பொழுது எல்லாம் உரையாடல் செய்திர்களோ அதை முழுமையாகப் பார்வையிடலாம்.


நாம் ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் உரையாட முகபுத்தகத்தில் நாம் முதலில் ஒரு குழுவை உருவாக்கி அதன் பின் தான் உரையாட முடியும் என்று  இருந்தது ஆனால் இப்பொழுது நாம் குழுவை உருவக்காமலே பல நண்பர்களுடன் உரையாடலாம் அதற்க்கு இந்த உரையாடல் பலகையில் வசதிகள் உள்ளது.

ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் உரையாட நாம் அந்த பலகையில் வலது பக்கத்தில் உள்ள ஐகானை சொடுக்குங்கள் அதில் ADD FRIENDS TO CHAT என்ற வசதி இருக்கிறது அதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களை அதில் பட்டியல் இட்டு சேர்த்துக் கொள்ளலாம்.இதன் மூலம் நீங்கள் உரையாடுவது அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது.


இதை எப்படி செய்வது :

ADD FRIENDS TO CHAT என்ற பொத்தானை சொடுக்கவும் பின்னர் அதில் சிறிய சொற்பெட்டி வரும் அதில் உங்கள் நண்பர்களின் பெயர்களை உள்ளிடு செய்யுங்கள் பின்னர் DONE என்ற பொத்தானை சொடுக்குங்கள் உங்களுக்கான புதிய உரையாடல் விண்டோ திறந்துவிடும் அதில் நீங்கள் உரையாடலாம்.நீங்கள் யாரையாவது மறந்து விட்டால் அந்த புது விண்டோவின் மேலே உள்ள ADD FRIENDS ஐகானை சொடுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.




புது விண்டோ இப்படி இருக்கும் :


அவ்வளவு தான் நீங்கள் இதில் வழக்கம் போல உரையாடலாம் .



இந்த பதிவு உபயோகமானதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்




Tuesday, July 19, 2011

மடிக்கணினியின் மின்கல காப்பை( BATTERY BACKUP) எவ்வாறு அதிகரிப்பது ?

0 comments
இந்த காலம் மடிக்கணினியின் காலம் என்றே குறிப்பிடலாம் அவ்வாறு இப்பொழுது மடிக்கணினியின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது யாரை எங்கு பார்த்தாலும் ஒரு மடிகணினியுடன் தான் இருக்கிறார்கள் . பெரும்பாலும் வேலை செய்பவர்கள் மடிக்கணினியை தான் விரும்புகிறார்கள் அதற்க்கு நிறைய காரணங்கள் இருக்கிறது . மடிக்கணினியை நாம் எங்கு எப்பொழுது வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் ஒரு கைபேசியோ அல்லது ஒரு USB மோடமோ இருந்தால் போதும் நாம் மடிக்கணினியின் மூலம் எங்கு இருந்தாலும் இணையத்தை உபயோகிக்கலாம் அது மட்டுமல்ல மற்ற சாதனகளுடம் இணைப்பதற்கு மிக எளிதாகவும் இருக்கும் இதனால் மடிக்கணினி அதிக புகழ் பெற்றுவிட்டது .

இதை இல்லாவ்வற்றையும் விட இன்றியமையாத ஒன்று என்னவென்றால் மடிக்கணினியை நாம் மின்சாரம் இல்லாத நேரங்களிலும் பயன்படுத்தலாம் என்பது தான். இந்த ஒரு விஷயத்தால் வேலை செய்யும் அனைவரும் மடிக்கணினியை பயன்படுத்த ஆசைபடுகிறார்கள்.

மடிக்கணிணியில் மின்கலத்தை உபயோக படுத்துகிறோம் இந்த மின்கலம் மின்சாரம் உள்ளபோது மின்சாரத்தை சேகரித்து வைத்துக்கொள்ளும் அதன் பின் மின்சாரம் இல்லா நேரங்களில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக மடிக்கணினிகள் இரண்டு மணிநேரம் மின்கலத்தின் காப்பு இருக்கும் ஆனால் நாம் மடிகணியை பராமரிப்பது பொறுத்தே அந்த மின்கலத்தின் காப்பு இருக்கும் நாம் அதை பராமரிக்க தவறினால் அதன் காப்பு மிகவும் குறைந்துவிடும் சில மடிக்கணினிகளை அரைமணி நேரம் மின்சாரம் கூட இல்லாமல் உபயோகிக்க முடியாது.நாம் மடிக்கணினியை மிகவும் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.

இதோ மடிக்கணினியை பராமரிக்க ஒரு இலவச மென்பொருள் மைக்ரோசாப்ட்டின் FIX IT . இந்த மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.



இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள் பின்னர் அந்த மென்பொருளை திறக்கவும் அதில் ACCEPT பொத்தானை அழுத்தவும் பின்னர் அந்த மென்பொருள் சில FIX IT கோப்புகளை தரவிறக்கும் அதற்கு பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.






பின்னர் இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யவும்.அதில் முதலில் உள்ளது சிக்கல்களை தேடி தீர்க்க குடியது . இரண்டாவது உள்ளது வெறுமனே சிக்கல் தேடுகிறது மற்றும் தனியாக ஒவ்வொரு சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கிறது.


அந்த சிக்கல்களை சரி செய்த பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.பின்னர் அதில் NEXT பொத்தானை அழுத்தி அடுத்த சிக்கலுக்கு செல்லவும் அல்லது அதை விட்டு வெளியேறவும்.



இதை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் மடிக்கணினியின் மின்கலம் காப்பு (BATTERY BACKUP) சற்று அதிகரிக்கும்.


இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் .




Wednesday, July 13, 2011

ஆன்லைனில் தட்டாசு பயில ! ! !

0 comments
ணினி என்ற உடனே நமக்கு ஞாபகம் வருவது விசைப்பலகை தான் அதில் நாம் என்ன தட்டாசு செய்கிறோம் என்பதை பொறுத்தே கணினி இயங்கிக் கொண்டு இருக்கும். விசை பலகை இல்லாத கணினியை நாம் செயல் படுத்துவதே கொஞ்சம் கடினமான விஷயம் ஆகிவிட்டது.

கணினியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கணினியின் விசைபலகயை பாராமல் தட்டாசு செய்ய ஆசைபடுவார்கள் . சிலர் இதற்காக தட்டாசு பயில தட்டாசு ஆசிரியரிடமோ அல்லது தட்டாசு செய்ய சொல்லி கொடுக்கும் பயிலகதிர்க்கு செல்லுவோம்.

நாம் தட்டாசு பயில அதிகாலை அல்லது அதற்கு என்று நேரம் ஒத்துக்க வேண்டி உள்ளது . நம்மில் சிலருக்கு வெளிய போக நேரம் கூட இருக்காது.

அவ்வாறு உள்ள சிலருக்காக சில நிறுவனங்கள் தட்டாசு பயிலுவதற்காக பல வகையான மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் இலவசமாகவும், பதிவிறக்கி கொள்ள வழிவகுத்து இருக்கிறது.

ஆனால் இதை நாம் பதிவிறக்கி நிறுவிக்கொண்டு அதன் பின் அதில் வரும் பாடங்களை ஒவ்வொன்றாக நாம் பயில வேண்டும் .

இப்போது அதை விட எளிதான முறை வந்துவிட்டது.நாம் இணையத்திலேயே தட்டாசு பயிலலாம் இதற்க்கு நிறைய இணையதளங்கள் வழிவகுக்கிறது. ஒவ்வொரு தளத்திலும் பாடங்கள் இருக்கும் இது தளத்திற்கு தளம்  மாறும் .

இந்த தளங்களில் நிறைய பாடங்கள் உள்ளன. அந்த பாடங்களை தொடர்ந்து கற்றுக்கொண்டு வந்தால் நாம் எளிதில் தட்டாசு பயின்று விடலாம் யார் உதவியும் இல்லாமல்.




இதோ அதற்க்கான சில தளங்கள் :

1.Sense Lang

2.Power Typing

3.Dvorak

4.Typing-Lessons

5.Typing Test

இதை போன்ற நிறைய தளங்கள் நமக்கு ஆன்லைனில் தட்டாசு பயில உதவுகிறது.

சாதாரண விசைப்பலகை மற்றும் அல்லாமல் கைபேசியில் உள்ள QWERTY என்னும் விசைபலகையும் நாம் இந்த தளங்களில் தட்டாசு பயிலலாம்.





! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! !

Monday, July 11, 2011

தரவுகளை( DATA TRASFER) வேகமாக பரிமாற்ற ஒரு மென்பொருள் ! ! ! !

0 comments
நாம் அனைவரும் தரவுகளை பரிமாற்றிக் கொண்டே தான் இருக்கிறோம் ஒவ்வொரு தரவுகளையும் வெவ்வேறு இடத்தில் சேமித்து கொண்டு தான் இருக்கிறோம் . தரவு பரிமாற்றம் என்பது மிக எளிதான ஒன்றல்ல நாம் நம் கணினியில் இருந்து மற்ற கணினிக்கு தரவுகளை மாற்ற LAN என்னும் தொழில்நுட்பம் நமக்கு பயன்படுகிறது இதன் மூலம் நாம் எந்த கணினியிடமும் தரவுகளை பரிமாறிக் கொள்ளலாம்.

LAN -இன் மூலம் நாம் ஒரு வீடு, பள்ளி, கணினி ஆய்வகம் அல்லது அலுவலக கட்டிடம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட புவியியல் பகுதியில் கணினிகள் மற்றும் சாதனங்களை இணைக்கலாம்.

அதைப்போல் நாம் கணினியை பார்மட் செய்யும் போதும் அது வைரஸினால் பாதிக்கப் பட்டிருக்கும் போதும் அதன் தரவுகளை பத்திரமாக சேமித்து வைப்பதற்கு  மற்ற கணினியை தான் நாட வேண்டி இருக்கிறது . நமக்கு தேவையான கோப்புகளை நம் நண்பரின் கணினியிலோ அல்லது நமது மற்றொரு கணினியிலோ சேமிப்பது வழக்கம்.

அந்த மாதிரி நாம் தரவுகளை மாற்றும் போது நமக்கு ஒரு PENDRIVE அல்லது மேலே உள்ள வற்றை போல ஒரு LAN வேண்டும் . அதன் மூலம் நாம் தரவுகளை மாற்றிக் கொள்ளலாம் ஆனால் அது அவ்வளவு வேகமாக செயல்படும் என்பது சொல்ல முடியாது .


இந்த மாதிரி நேரத்தில் நமக்கு ஒரு மென்பொருள் கைகொடுக்கிறது அது தான் IP MESSENGER இந்த மென்பொருளானது நமக்கு தரவுகளை மிக வேகமாகவும் எளிதாகவும் பரிமாறிக் கொள்ள வழிவகுக்கிறது .இந்த மென்பொருள் செயல்பட ஒரு LAN கேபிள் மட்டும் தேவை இந்த லேன் கேபிள் மற்ற கணினியுடன் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

இந்த மென்பொருளை பதிவிறக்க :



இந்த மென்பொருளை பதிவிறக்கி அதை RUN செய்யவும் . அது உடனே டாஸ்க்பாரில் வலது பக்கத்தில் சின்ன ஐகானாக வரும் அதை இரண்டு முறை அழுத்தவும் பின்னர் அதில் உள்ள REFRESH பொத்தானை அழுத்தினால் பகிர்வில் உள்ள அனைத்து கணினியும் வரும் அதில் உங்களுக்கு தேவையான கணினிக்கு MESSAGE அனுப்பிக்கொள்ளலாம் நீங்கள் எந்த வகையான கோப்புகளையும் அனுப்பலாம்.


இதில் கோப்புகள் பரிமாற்றம் மட்டும் அல்லாது குறும்செய்திகளும் அனுப்பலாம் . இந்த மென்பொருள் CLICK & DRAG மூலம் இயங்கும் அதனால் நீங்கள் பரிமாற்ற வேண்டிய கோப்புகளை அதன் உள்ள இழுத்து போட்டு விட்டு எந்த கணினிக்கு அனுப்ப வேண்டுமோ அந்த கணினியை தேர்வு செய்து SEND என்ற பொத்தானை அழுத்தினால் போதும் உடனே அது அந்த கணினியில் பதிவிறக்கமாகும்.

முக்கியமான விசயம் என்னவென்றால் நீங்கள் எந்த கணினிக்கு தரவுகளை பரிமாறுகிர்களோ அந்த கணினியிலும் IP MESSENGER அக்டிவேட்  செய்யப்பட வேண்டும்.

இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்கள் தரவுகளை குறைந்தது 10 MBPS வேகத்தில் அனுப்பலாம். எனக்கு 35 MBPS வேகத்தில் பரிமாற்றம் நடந்தது .

ஒரு LAN கேபிள் இருந்தால் போதும் எந்த இரண்டு கணினிக்கும் இணைப்பு கொடுத்து விடலாம் இந்த மென்பொருள் இரண்டு புறமும் நிறுவப் பட்டிருந்தால்.




! ! ! சும்மா போகக் கூடாது ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க ! ! !


Friday, July 8, 2011

கோப்புகளை பதிவிறக்காமல் பார்வையிட ! ! !

0 comments
நாம் அனைவரும் இணையத்தில் பல வகையான கோப்புகளை தேடுகிறோம் . நம்மில் பெரும்பாலானோர் கூகிளை தான் நாடுகிறோம் நாம் தேடும் அனைத்தும் கூகுளில் கிடைக்கிறது .

ஆனால் சில கோப்புகளை தேடும் போது அந்த கோப்புகள் பதிவிறக்க வேண்டும் என்று சொல்லும் அதை பதிவிறக்கினால் நாம் தேடியது அந்த கோப்பாக இருக்காது .

அந்த மாதிரி பல கோப்புகளை நாம் பதிவிறக்கி பதிவிறக்கி இணையத்தின் MB தான் தேய்ந்து கொண்டு போகும் .இப்பொழுது தான் ஆடியோ கோப்புகளை நாம் சோதித்து பதிவிறக்க சில தளங்கள் உதவி செய்கின்றன . ஆனால் நாம் மற்ற கோப்புகளை சோதித்து பார்த்து பதிவிறக்க இயலாது .

இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு இப்பொழுது தீர்வு வந்து விட்டது .ஆம் நாம் வோர்ட், இமேஜ், சுட்டிகள், ஆடியோ, வீடியோ மற்றும் சில கோப்புகளை நாம் பதிவிறக்காமல் முன்னோட்டம்  பார்க்கலாம் .

தளத்திற்கு  படத்தை சொடுக்கவும் :





இந்த தளத்தில் நாம் எந்த வகையான கோப்புகளையும் பார்க்கலாம் அதற்க்கு நாம் அந்த கோப்பின் இணைய முகவரியை அந்த தளத்தில் உள்ள பெட்டியில் உள்ளிட்டு  ENTER -ஐ அழுத்தவும் . 

அவ்வளவு தான் நீங்கள் அந்த கோப்பினை பார்வையிடலாம் அதை நாம் பதிவிறக்க தேவையில்லை . அந்த இணைய முகவரியை மட்டும் சரியாக சொடுக்கினால் போதும் .



மேலும்  இந்த தளத்தில் நீங்கள் உங்கள் கோப்புகளை பதிவேற்றம் செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம் . அவர்களும் அந்த கோப்பினை பதிவிரக்கமால் பார்வையிடலாம் .

அது மட்டும் அல்ல அந்த கோப்புகளை உங்கள் FACEBOOK மற்றும் TWITTER கணக்கில் பகிர்த்து கொள்ளலாம்.



சும்மா போனா எப்படி ஒரு குத்து குத்திட்டு போங்க என்ன இல்லைங்க ஓட்டு பட்டைல ! !



Tuesday, July 5, 2011

ஆப்லைனில் மின்னஞ்சல் பார்க்க ! ! ! !

0 comments
மின்னஞ்சல் பயன்பாடானது தற்போது அதிகரித்து கொண்டே உள்ளது.பல்வேறு நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை இலவசமாக வழங்கி வருவதே இதற்க்கு முக்கிய காரணம் . என்ன தான் இலவசமாக மின்னஞ்சல் சேவையினை பெற்றாலும் இதனை நாம் இணைய உதவியுடன் மட்டுமே அணுக முடியும் .

இணைய இணைப்பில் இல்லாத போதும் மின்னஞ்சல்களை காண முடியுமா என்றால் அதற்க்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும் ?

என்னுடைய பதில் : ஆம் முடியும்

இதற்க்கு ஒரு மென்பொருள் நமக்கு உதவுகிறது .






இதை பபதிவிறக்குவதர்க்கான சுட்டி : MAIL STORE HOME

மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும் . அதற்க்கு பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும் .பின்னர் அந்த மென்பொருளை திறந்து ARCHIVE E-MAIL என்ற பொத்தானை அழுத்தி உங்களுடைய கணக்கை தேர்வு செய்து உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும் . பின்னர் சிறிது நேரம் உங்களுடைய மின்னஞ்சல்கள் நகல் எடுக்கப்பட்டு கணினியில் சேமிக்கப்படும்.

பின் மின்னஞ்சல்களை வழக்கம் போல் நீங்கள் பார்வையிடலாம் . இந்த மென்பொருள் மூலம் நாம் மினஞ்சல்களை எளிமையாக கையாளமுடியும் . இந்த மென்பொருள் மூலம் நீங்கள் சீடி / டி.வீ.டி , பிளாஷ் டிரைவ் மற்றும்      பிற வன்தட்டுகளில் மினஞ்சல்களை சேமிக்கலாம் . மினஞ்சல்களை பேக்அப் செய்து கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது . இந்த மென்பொருள் ஆப்லைனில் மினஞ்சலை படிக்கவும் சேமிக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது .




இதில் இயல்பாகவே ஜிமெயிலை தான் இயக்கும் மற்ற மினஞ்சல்களுக்கு தனியாக கணக்கு உருவாக்கி கொள்ளவும்.


! ! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! !



Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets