skip to main | skip to sidebar

Friday, April 22, 2011

ஒளிப்பட மென்பொருள் ! ! !

0 comments
ளிப்படங்களை எடிட் செய்ய வேண்டும்மெனில் ஏதாவது ஒரு  போட்டோ எடிட்டர் மென்பொருள் தேவை. இந்த வகையில் அனைவரும் அறிந்த மென்பொருள் போட்டோஷாப் . இதில் தான் ஒளிப்படங்களை எடிட் செய்ய வேண்டும் என்பதில்லை உங்களுக்கு விருப்பமான எந்த மென்பொருளையும் பயன்படுத்தலாம் .

ஆனால் அவையாவும் சிறப்பாக இருப்பதில்லை என்று குறை இருப்பினும் போட்டோஷோப்க்கு மாற்றான சிறந்த மென்பொருள் எடிட்டிங் மென்பொருள் ஒன்று உள்ளது .

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம் . இதை  போட்டோஷோப்பை விட எளிதாக இயக்கலாம் . இந்த மென்பொருள் மிகவும் சிறப்புடையது . இது மிகவும் சிறியதாகும் 4MB இந்த மென்பொருளில் 50-க்கும் மேற்ப்பட்ட சிறப்பு எபெக்டுகள் உள்ளன .



போட்டோஷோப் இல்லாத நேரத்தில் இந்த மென்பொருளானது கைகொடுக்கும்.ஒளிப்படங்களை மேலும் அழகுபடுத்த விரும்பினால் இதில் நிறைய டூல்களை இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும் .

இந்த மென்பொருளின் உதவியுடன் ஒளிப்படங்களை சிறப்பாக எடிட் செய்ய முடியும் . விண்டோஸ் 7 ஆப்பேரட்டிங் சிஸ்டத்தில் இந்த மென்பொருளானது முழுமையாக வேலை செய்கிறது .

இதை தரவிறக்க கீழே உள்ள படத்தை அழுத்தவும் :

Sunday, April 10, 2011

உங்கள் FIREFOX உலாவியின் முகப்பில் நிறைய பக்கங்கள் வைக்க !!!!!

0 comments

  ண்பர்களே !!! நம்மில் பெரும்பாலானோர் FIREFOX உலாவியை தான் பயன்படுத்துகிறோம் .

     இதில் நமக்கு தேவையான இல்லா வசதிகளும் உள்ளன அப்படி இல்லாததை நாம் இதன் கூட்டு உறுப்பு(ADD-ON) மூலம் பெற்றிடலாம் . ஆனால் நாம் இந்த உலாவியை திறந்த உடன் அது ஒரு இணைய பக்கத்தை திறக்கும் இது தான் நம் உலாவியின் முகப்பு பக்கமாக நிறுவப்பட்டிருக்கும் .

நாம் விரும்பும்வண்ணம் இதை நாம் மாற்றி அமைக்கலாம் . இது இல்லோரும் அறிந்த  விஷயம் .

      நாம் இணையத்திற்கு சென்றால் ஒரு சில இணையப் பக்கங்களுக்கு நாம் கண்டிப்பாக செல்லுவோம் என்பது நாம் அறிந்ததுதான்.அதை நாம் ஒவ்வொரு முறையும் உலாவியில் தட்டாசு செய்ய வேண்டும் .

அதற்க்கு பதிலாக நம் உலாவியை திறந்த உடனே அந்த பக்கங்களும் திறந்து விட்டால் ! ! !

    ஆனால் FIREFOX-இல் ஒன்றுக்குமேர்பற்ற பக்கங்களை ஒரே சொடுக்கில் திறக்க முடியுமா ? என்பது தான் கேள்வி



இதற்கு பதில் ஆம் முடியும் ! ! ! !

இதற்க்கான வழி இதோ :

1.முதலில் உங்கள் உலாவியை திறந்து கொள்ளவும் பின்னர் அதில்

TOOLS->OPTION->GENERAL -ஐ தேர்வு செய்யவும் .

2.பின்னர் அதில் WHEN FIREFOX STARTS : என்ற கேள்விக்கு SHOW MY HOMEPAGE என்று தேர்வு செய்யவும் .

3.பிறகு HOME PAGE என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான இணையப் பக்கங்களை தட்டாசு செய்யுங்கள் ஆனால் ஒவ்வொன்றுக்கும் இடையில் | என்ற பிரிப்பானை பயன்படுத்தவும் .

இதைப்போல :


http://www.google.co.in/|http://www.facebook.com|http://www.nunukkangal.blogspot.com

4.பின்னர் OK பொத்தானை சொடுக்கவும் .

உங்கள் உலாவியை மறுதொடக்கம் செய்யவும் .




! ! ! பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! ! 
 
 

Wednesday, April 6, 2011

கணினியில் கட்டாயம் இருக்க வேண்டியவை ! ! !

2 comments
                
  ணையத்தில் ஏராளமான இலவச மென்பொருள்கள் உள்ளன . இவை     இல்லவற்றையும் ஒருவர் பயன்படுத்துவது என்பது சாத்தியமேயில்லை .       ஆனால் சில இலவச மென்பொருள்கள் மிக அவசியமான மென்பொருளாக உள்ளன .

இதோ அவற்றில் சில

கிளாரி யுட்டிலிட்டிகள் :

                          இந்த மென்பொருள் கணினியில் உள்ள டுப்ளிகேட் பைல்களை         கண்டறியவும் இணையத்தில் நீங்கள் உலாவிய தடத்தை நீக்கவும் பயன்படுகிறது . இதன் மூலம் உங்கள் கணினியின் ஸ்டார்ட்அப்பை விரைவு படுத்தலாம்.உங்கள் கணினி விரைவாக செயல்படும்.


இதனை தரவிறக்க :


இமேஜ் வியுவர்கள் :

நாம் சேமித்து வைத்து உள்ள ஒளி படங்களை பார்வையிட உதவும் மென்பொருள் விண்டோவ்சில் இருக்கிறது இருப்பினும் சில பிரபலமடயாத பார்மட்டில் இருந்தால் நாம் அதை பார்க்க முடியாது இதை பார்வையிட சில மென்பொருள்கள் இதோ

இதனை தரவிறக்க :




மீடியா பிளேயர் :

இணையத்தில் இருந்து பதிவிறக்கிய சில மீடியா பைல்களை விண்டோஸ் மீடியா பிளேயர் இயக்க மறுக்கும் இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டு இருக்கும் இப்படி வருவதை தடுக்க நாம் VLC மீடியா பிளேயர் பயன்படுத்தலாம் . இது எந்த வகை கோப்புகளையும் இயக்கும் .


இதை தரவிறக்க :


ஆன்ட்டிவைரஸ் :

வைரஸ்களை தடுக்கும், கண்டறிந்த வைரஸை அகற்றவும் சிறந்த ஆன்ட்டிவைரஸ் டூல்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது . இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இலவச மென்பொருளை வழங்குகிறது இதன் பெயர் MS செக்யூரிட்டி எசன்சியல்ஸ். அண்மைய தரமதிப்பீட்டில் சிறந்த பாதுகாப்பு மென்பொருளாக இது வகைபடுத்தப் பட்டுள்ளது .இதை பயன்படுத்த விரும்பாதவர்கள் AVG -ஐ பயன்படுத்தலாம்.



இதை தரவிறக்க : 


குறிப்பு :

இலவச மென்பொருளை நிறுவும்போது கவனமாக இருக்க வேண்டும் .இவை இலவசமாக கிடைப்பதால் சில டூல்பார்கள் நிருவப்படலாம் மற்றும் நம் உலாவியின் முகப்பு பக்கம் மாற்றி அமைக்கப்படலாம் .



! ! ! மறக்காமல்  வாக்களியுங்கள் ! ! !
 
 

Sunday, April 3, 2011

இந்தியாவின் உலகக்கோப்பை ! ! !

0 comments

ந்தியா மறுபடியும் இந்த உலகிற்கு நாம் யார் என்பதை நிருபித்தது மும்பையில் நடைப்பெற்ற உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          இது ஒரு புதிய உலக சாதனை இதுவரை உலககோப்பை நடத்திய எந்த நாடும் தன் மண்ணில் ஜெயத்தது இல்லை இதுவே முதல் முறை நம் மண்ணில் நாம் செய்துள்ளோம்.

28 ஆண்டுகளுக்கு பிறகு நாம் உலகக்கோப்பையை கைபற்றயுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

                ராமன் சீதையை ராவணனிடம் இருந்து கைப்பற்றியது போல நம் இந்தியா இலங்கையிடம் இருந்து உலககோப்பையை கைபற்றியுள்ளது .



                           274 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்த இலங்கை வீரர்கள் மிக சந்தோஷத்துடன் இருந்தனர் அதற்க்கு பிறகு களம் இறங்கிய இந்தியா தொடகத்திலயே அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் ஷேவாக்கை இழந்தது அதற்க்கு பின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் ஆட்டமிழந்தார் இந்த விக்கெட்டை கைப்பற்றிய மலிங்கா திடலை சுற்றி ஓடி ஆரவாரமும் செய்தார் . ஆனால் அதற்க்கு பின் களம் இறங்கிய காம்பிர் மற்றும் கோஹ்லி சிறப்பாக விளையாடி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தனர் அதற்க்கு பின் வந்த கேப்டன் டோனியும் தன் ஆட்டத்தை பொறுப்பாக ஆடி வெற்றிக்கு வழிவகுத்தார் . பிறகு இறுதியில் குலசேகரா வீசிய இரண்டாம் பந்தில் ஒரு ஹெலிகோப்ட்டர் சாட்(HELICOPTER SHOT) அடித்து வெற்றியை உறுதிச்செய்தார் டோனி  .

! ! ! ! ! இந்தியா உலகக்கோப்பையை தமதாக்கிக்கொண்டது ! ! ! ! !


வெற்றிக்கு உறுதுணையாக இருந்த டோனி MAN OF THE MATCH விருதை தட்டிச்சென்றார்

387 ரன்களும் 15 விக்கெட்டும் கைப்பற்றிய யுவராஜ் சிங் MAN OF THE SERIES விருதை பெற்றார் .

இதோ உங்களுக்காக அதன் ஒரு தொகுப்பு :







Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets