skip to main | skip to sidebar

Monday, December 12, 2011

பேஸ்புக்கிற்கான உரையாடல் மென்பொருள் (CHATTING SOFTWARE )

3 comments
சமூக வலைதளங்களில் அதிகமானோரால் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். இந்த தளமானது சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கி கொண்டுள்ளது. இந்த தளத்தை பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு என்றுகூட கூறலாம் அந்த அளவுக்கு இதனை அதிகமானோர் பார்வையிடுகின்றனர். அந்த அளவுக்கு இந்த தளத்தில் உள்ள வசதிகள் இல்லோரையும் கவர்ந்துள்ளது. 


இதனை பலரும் இரவும் பகலுமாக பயன்படுத்துகின்றனர். இதனை அவர்கள் தங்களின் நிலையை அப்டேட் ( STATUS UPDATE ) செய்யவும் படங்களை தங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும் இதனை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிகமானோர் இதனை பயன்படுத்துவது உரையாடுவதற்காக மட்டுமே இவர்களுக்காகவே ஒரு மென்பொருள் வந்துள்ளது இதன் மூலம் நாம் நம் நண்பர்களிடம் மிக எளிதாக உரையாடலாம். 


இந்த மென்பொருளின் பெயர் F-TALK இது நம் G-TALK போல தான் இதனை பயன்படுத்துவதும் மிக எளிது. இந்த மென்பொருள் மூலம் நாம் நம் டெஸ்க்டாப்பில் இருந்தப்படியே நம் நண்பர்களுடன் உரையாட இயலும். இந்த மென்பொருள் கணினி தொடங்கும்போதே இயங்குகிறது. 






நீங்கள் இணையத்தில் இருக்கும்போது உங்கள் கணினியை திறந்தாலே உங்கள் பேஸ்புக் கணக்கு லாகின்செய்யப்பட்டுவிடும் நீங்களும் ஆன்லைனில் இருப்பீர்கள். இதனால் நீங்கள் மிக எளிதாக உரையாடலாம்.



இதனை பதிவிறக்க : FTALK


இதனை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் பின்னர் உங்கள் பேஸ்புக் கணக்கின் உள்ளே நுழைந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் நீங்கள் வழக்கம்போல் உங்கள் நண்பர்களுடன் அரட்டையடிக்க ஆரம்பிக்கலாம்.



இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

Monday, November 28, 2011

வீடியோ கோப்புகளை ஆடியோ கோப்பாக மாற்ற ! !

3 comments
இணையத்தில் கிடைக்காதது எதுவும் இல்லை என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு இணையத்தில் பல தகவல்களும் , மென்பொருள்களும் , வசதிகளும் அதிக அளவில் கொட்டிகிடக்கிறது . நம்மில் பலரும் இணையத்திற்கு வந்தால் ஒரு முறையாவது வீடியோ தளங்களுக்கு சென்றுவருவோம் அல்லது ஒரு ஆடியோ தளதிற்க்காவது செல்வோம். பலரும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதனை நம் கைபேசியில் பார்க்கும் மாதிரி மாற்றிவிட்டு ரசிப்போம்.

இந்த மென்பொருள் மூலம் நாம் விரும்பும் வீடியோ கோப்புகளை மிக எளிதாக ஆடியோவாக மாற்றி விடலாம். இந்த மென்பொருள் அளவிலும் சிறியதுதான் இதனால் இதனை நாம் எளிதாக பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

இந்த மென்பொருள் மூலம் நாம் பல வகையான வீடியோ பார்பாமட்களையும் ஆடியோவாக மாற்றலாம்.

இதனை பதிவிறக்க : பதிவிறக்க சுட்டி 


வீடியோவை ஆடியோவாக மாற்ற :

  • முதலில் மேலே உள்ள தளத்திற்கு சென்று இந்த கோப்பினை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

  • பின்னர் உங்களுக்கு தேவையான கோப்புகளை தேர்வு செய்யுங்கள். அதனை இழுத்து இந்த மென்பொருளில் மீது போடுங்கள்.

  • அல்லது அதில் உள்ள ADD பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான கோப்புகளை தேர்வு செய்யுங்கள்.

  • பின்னர் அதன் கீழே கோப்பினை சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யுங்கள்.

  • பின்னர் CONVERT பொத்தனை அழுத்துங்கள் உங்கள் வீடியோ கோப்பு ஆடியோவாக மாற்றப்படும்.






SUPPORTED FORMATS :

*.avi, *.ivf, *.div, *.divx, *.ogv, *.mpg, *.mpeg, *.mpe, *.mp4, *.m4v, *.wmv, *.asf, *.mov, *.qt, *.ts, *.mts, *.m2t, *.m2ts, *.mod, *.tod, *.3gp2, *.3gpp, *.3gp, *.3g2, *.dvr-ms, *.vro, *.flv, *f4v, *.amv, *.rm, *.rmm, *.rv, *.rmvb, *.mkv




யூடியுப்பில் இருந்து வீடியோவை ஆடியோவாக மாற்றி தரவிறக்க ! !




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

Tuesday, November 22, 2011

ஆன்லைனில் ஸ்க்ரீன் ரெகார்டிங் செய்ய சிறந்த தளம் ! !

2 comments
ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் ஸ்க்ரீன்கள் ரெகார்டிங் செய்வதற்கு பல மென்பொருள்கள் இலவசமாகவும் காசுக்கும் கிடைக்கிறது. இலவசமாக பல மென்பொருள்கள் கிடைத்தாலும் அதில் பல வசதிகள் இருக்காது. இந்த மாதிரியான மென்பொருளை பயன்படுத்தி பயன்படுத்தி கணினியின் நிலைவட்டில் (HARD DISK) நினைவகம் குறைந்தது விட்டது.


நீங்கள் இந்த மாதிரி எந்த வகையான தொந்திரவும் இல்லாமல் உங்கள் கணினியில் எந்த பதிவிறக்கமும் செய்யாமல் நல்ல ஸ்க்ரீன்ஷாட்களை உருவாக்க விரும்பினால் இதோ அதற்க்கான ஒரு தளம். இந்த தளம் மூலம் நாம் நம் ஸ்க்ரீனை மிகவும் எளிதாக ரெகார்ட் செய்யலாம்.

தளத்திற்கு செல்ல :  Screencast-O-Matic



இந்த தளம் மூலம் நாம் நம் ஸ்க்ரீனை மிக எளிதாக ரெகார்ட் செய்யலாம் இதன் மூலம் நாம் ஸ்க்ரீனை பதிந்துக் கொள்ளலாம் அது மட்டுமல்ல அதனை பகிர்ந்து கொள்ளலாம். இது நம் உலாவியின் மூலம் செயல்படுகிறது அதனால் நாம் எந்த வகையான இயங்குதளம் பயன்படுத்தினாலும் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஸ்க்ரீன்களை ரெகார்ட் செய்ய : 

  • மேலே உள்ள சுட்டியை அழுத்தி அந்த பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள் பின்னர் Start Recording என்ற பொத்தானை அழுத்துங்கள்.

  • பின்னர் ஒரு விண்டோ திறக்கும் அதில் ரெகார்ட் ஸ்க்ரீன் வரும் அதில் உங்கள் தேவைக்கு ஏற்ப அதில் உள்ள அமைப்புகளை மாற்றிவிட்டு சிவப்பு பொத்தானை அழுத்துங்கள் உங்கள் திரை ரெகார்ட் செய்யப்படும்.

  • பதிவு செய்வதை நிறுத்த DONE பொத்தனை அழுத்துங்கள் .

  • அவ்வளவு தான் உங்கள் திரை பதிவாகிவிடும். ஆனால் இதன் மூலம் நீங்கள் பதினைந்து நிமிடம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.



  • மேலும் இதன் மூலம் நீங்கள் பதிவு செய்யும் வீடியோக்களை யூடியூபில் நேரடியாக பதிவேற்றம் செய்யலாம்.

நீங்கள் இதன் மூலம் PICTURE-IN-PICTURE(PIP) படங்களை உருவாக்கலாம். இதன் மூலம் நாம் நம் வெப்காமேராவையும் இயக்க முடியும்.


இனி நீங்கள் மிக எளிதாக வீடியோக்களை ரெகார்ட் செய்யலாம் அதுவும் இலவசமாக...





இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

Thursday, November 10, 2011

எல்லா வகையான கோப்பினையும் ஆன்லைன் மூலம் வடிவத்தை மாற்ற ! !

3 comments
சில குறிப்பிட்ட நோக்கத்துக்காக பல வகையான கோப்புகள் பயன்படுத்தப் படுகின்றன இதானல் நாம் குறிப்பிட்ட வகையான கோப்பினை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை நாம் எந்த வகையான கோப்பினையும் நாம் விரும்பும் வண்ணம் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு பல வடிவங்களில் கோப்புகள் நிறைய உள்ளன.

நம் கோப்புகளை பிறருக்கு தரும்போது அதனை அவர்கள் விரும்பிய வகையில் விரும்பும் வடிவத்தில் கொடுக்கலாம் அதற்காக பல வகையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகவும் , கட்டணம் அடிபடயிலும் இருக்கின்றது. அதுமட்டுமல்ல ஆன்லைனில் கூட பல வடிவங்களை மாற்றும் மென்பொருள்கள் செயல்படுகின்றன. அதில் இந்த தளம் பல வசதிகளை தன்னில் கொண்டுள்ளது.

இந்த தளத்தில் நாம் படம் , வீடியோ, ஆடியோ மற்றும் ஆவணங்களையும் பல  வடிவங்களில் மாற்றலாம்.இந்த வசதியை பயன்படுத்துவதும் மிகவும் எளிது.








தளத்திற்கு செல்ல : CONVERT FILES


  • மேலே உள்ள தளத்திற்கு செல்லுங்கள் பின்னர் அதில் உள்ள BROWSE என்ற பொத்தானை அழுத்துங்கள் 

  • அதில் உங்கள் கோப்பினை தேர்வு செய்யுங்கள் பின்னர் உங்களுக்கு தேவையான வடிவத்தை தேர்வு செய்யுங்கள் 

  • பின்னர் CONVERT NOW என்ற பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் கோப்பின் வடிவம் மாற்றபடும் அதனை தரவிறக்கி கொள்ளுங்கள் 

அதுமட்டுமல்ல இந்த தளத்தில் நாம் நேரடியாக பதிவிறக்க முகவரியையும் கொடுத்து கோப்பின் வடிவத்தை மாற்றலாம். இந்த தளம் மூலம் ZIP,RAR ARCHIVE, PDF, XPS, PPT, போன்ற பல வகையான கோப்புகளின் வடிவத்தையும் மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த தளத்தில் உள்ள வடிவங்கள் : Supported Files





இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

Friday, October 28, 2011

விண்டோவ்ஸ் ் 7 இல் மறைந்துள்ள பிரச்சனைகள் பதிப்பான் ( PROBLEM RECORDER )

7 comments
உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்த கூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவனமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண்டோஸ் 8-இன் சோதனை பதிப்பை இப்பொழுது தான் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்ப்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது.இந்த விண்டோஸ் 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. அதில் உள்ள ஒரு சிறப்பான வசதியை பற்றி பார்ப்போம்.

விண்டோஸ்7 இல் ப்ராப்ளம் ரெகார்டர் என்ற ஒரு வசதி இருக்கிறது இதன் மூலம் நாம் நம் கணினியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கம்ப்யூட்டர் சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கோ அனுப்பி அந்த மென்பொருளில் உள்ள பிரச்சனைகளை பற்றி அறிந்துகொள்ளலாம்.

இந்த மென்பொருள் ஒவ்வொரு திரையையும்  பதித்து ( SCREEN SHOT ) வைக்கிறது அதுமட்டுமல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு கிளிக்யையும் பதிந்து வைக்கிறது. இதன்  மூலம் நீங்கள் எங்கே என்ன செய்திர்கள் என்பதை மிக எளிதாக அறிந்துகொள்ளலாம். இதனை இயக்குவதும் மிகவும் சுலபமானது.

இதனை திறப்பதற்கு :

  • START மெனுவில் கிளிக் செய்து அதில் RUN-ஐ அழுத்துங்கள் அதில் PSR என தட்டாசு செய்யுங்கள் ( அல்லது )

  • START மெனுவில் உள்ள SEARCH என்பதில் PSR என தட்டாசு செய்யுங்கள்.




இதனை  பயன்படுத்த :
    • முதலில்அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.

    • பின்னர்  வரும் விண்டோவில் START RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள்.

    • பின்னர் எந்த மென்பொருள் செயல்படவில்லையோ அதனை திறந்து நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.

    • நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சுட்டியினை அழுத்தும்போதும் இந்த மென்பொருள் ஸ்க்ரீன் SNAP SHOT எடுத்து வைக்கும்.

    • முடிந்த உடன் STOP RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள்.

    • பின்னர் அது கோப்பை ( FILE ) எங்கு சேமிக்க வேண்டுமென்று கேட்கும்  அதனை தேர்வு செய்து SAVE பொத்தனை அழுத்துங்கள்.



    • அவ்வளவு தான் நீங்கள் இந்த கோப்பை யாருக்கு வேண்டுமோ அனுப்பிகொள்ளுங்கள்.

    இந்த மென்பொருள் உங்கள் ஸ்க்ரீன்கலை பதிந்து MHTML கோப்பாக மாற்றிவைக்கும் அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படியாக சேமிக்கப் பட்டிருக்கும்.





    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

    Saturday, October 22, 2011

    யூடியுப்பில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து தரவிறக்க ! !

    8 comments
    இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு வீடியோ பகிரும் தளம் யூடியுப். இந்த தளத்தில் அனைத்து வகையான வீடியோக்களையும் நாம் பார்க்கலாம் அதுமட்டுமல்ல நாமும் நம் வீடியோவை நம் நண்பர்களிடம் பகிர்ந்ததுகொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து வீடியோவை பதிவிறக்க பல வகையான மென்பொருள்கள் உள்ளது அது மட்டுமல்ல பல வகையான இணையதளங்கள் மூலமாகவும் நாம் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கி கொள்ளலாம். 

    இதில் நீங்கள் எந்த வகையான வீடியோவையும் பார்க்கலாம் இதில் இல்லாத வீடியோவே கிடையாது என்று குறலாம். அந்த அளவுக்கு இதில் வீடியோக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வீடியோ சிலவற்றிற்கு ஆடியோவை தேடினாலும் கிடைக்காது. அந்த மாதிரியான நேரங்களில் இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன் .

    சில தளங்கள் மூலம் நாம் யூடியுப்பின் வீடியோவை ஆடியோவாக மாற்றலாம் அதைப்போல தான் இந்த தளமும் ஆனால் இந்த தளம் சற்றுவேகமாகவே செயல்படுகிறது. யூடியுப் வீடியோக்களை மிகஎளிதாக இந்த தளம் மூலம் ஆடியோவாக மாற்றிவிடலாம்.



    இந்த தளத்திற்கு செல்ல : www.youtube-mp3.org



    வீடியோவை ஆடியோவாக மாற்ற : 


    • மேலே உள்ள தளத்திற்கு செல்லுங்கள் பின்னர் உங்கள் யூடியுப் வீடியோவின் சுட்டியை (LINK) காப்பி செய்து கொள்ளுங்கள்.
    • அந்த தளத்தில் உள்ள பெட்டியில் அதை பேஸ்ட் செய்யுங்கள்.
    • பின்னர் CONVERT VIDEO என்ற பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவு தான் உங்கள் வீடியோ ஆடியோவாக மாற்றப்படும்.
    • அதனை பதிவிறக்கி கொள்ளுங்கள்.






    இனி உங்களுக்கு பிடித்த வீடியோ பாடல்களை ஆடியோவாக எளிதாக மாற்றுங்கள்.



    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

    Monday, October 17, 2011

    முக்கியமான செய்திகளை ரகசியமாக பரிமாறிக்கொள்ள ! !

    4 comments
    இப்பொழுது இணையத்தின் ஆதிக்கம் தான் நடக்கிறது எந்த ஒரு விசயத்தையும் நாம் இப்பொழுது இணையத்தில் தான் பகிர்ந்து கொள்கிறோம். நண்பர்களிடம் தொடங்கி நம் முதலாளி வரைக்கும் நாம் அனைவரும் இணையத்தை தான் பயன்படுத்துகிறோம். அதைப்போல் இணையத்தில் தகவல்கள் திருடபடுவதும் ரொம்பவே சாதாரணமாக நடக்கிறது. நாம் ஒருவரிடம் பகிரும் தகவலை மிகவும் எளிதாக ஹச்கேர்ஸ் எடுத்துவிடுகிரர்கள்.இதனை தடுக்க பல வழிகள் வந்துவிட்டது. அது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

    இதற்க்கு ஒரு இணையதளம் நமக்கு மிகவும் உதவுகிறது. இந்த தளம் மூலம் நாம் நம் செய்தியை ஒரு குறிப்பிட்ட கடவுச்சொல் கொடுத்து மாற்றிவிடலாம். அதனை நீங்கள் உங்கள் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ பரிமாறிக் கொள்ளுங்கள். பின்னர் அவர்கள் அந்த தளத்திற்கு சென்று நீங்கள் கொடுத்த கடவுச்சொல்லை கொடுத்து நீங்கள் அணுப்பிய தகவலை பார்க்கலாம்.

    இந்த தளத்திற்கு செல்ல : Encipher It


    செய்தியை என்கிரிபட் செய்ய :

    • மேலே உள்ள தளத்திற்கு செல்லுங்கள் பின்னர் அதில் இருக்கும் இணைப்பை இழுத்து உங்கள் உலாவியின் BOOKMARK TOOLBAR-இல் போடுங்கள் 
    • பின்னர் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் இருந்தோ அல்லது வேறு இடங்களில் இருந்தோ இதனை மிக எளிதாக இயக்கலாம்.

    • உங்களுக்கு இது எப்பொழுது தேவையோ அப்பொழுது உங்கள் செய்தியை தட்டாசு செய்துவிட்டு  BOOKMARK TOOLBAR-இல் கிளிக் செய்யுங்கள்.
    • உங்களுக்கு ஒரு விண்டோ வரும் அதில் உங்கள் கடவுச்சொல்லை தட்டாசு செய்து ENCRYPT என்ற பொத்தானை அழுத்துங்கள்.
    • உங்கள் செய்தி வேறொரு வடிவில் உங்களுக்கு கிடைக்கும் அதனை நீங்கள் யாருக்கு அனுப்பவேண்டுமோ அனுப்புங்கள்.
    • ஆனால் நீங்கள் அணுப்பிய செய்தியை படிக்க அவர்களுக்கு உங்கள் கடவுச்சொல் தெரிய வேண்டும்.
    • DECRYPT செய்வதும் ENCRYPT செய்வதுபோல் தான் செய்ய வேண்டும்.



    உங்கள் செய்திகளை மிகவும் பாதுகாப்பாக பரிமாறிக் கொள்ளுங்கள்.


    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

    Wednesday, October 12, 2011

    கூகிள் க்ரோம் மூலம் மற்றொரு கணினியை அணுக

    11 comments
    டீம் வீயூவேர் பற்றி அனைவரும் அறிந்திருப்பர் இந்த மென்பொருள் மூலம் நாம் தொலைவில் உள்ள கணினியை அணுகலாம் அது மட்டுமல்ல அவர்கள் செய்வதை நாம் பார்வையிடலாம் இந்த மென்பொருளானது அதிகமாக கம்பனிகளில் தான் பயன்படுத்தபடுகிறது ஒரு கணினியை நாம் நம் வீட்டில் இருந்தவாரே சரி செய்துவிடலாம் அது மட்டுமல்ல இதன் மூலம் கோப்புகளையும் பரிமாறிக்கொள்ளலாம். இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
    ஆனால் இப்பொழுது கூகிள் க்ரோம் மூலம் நாம் இதே வேலையை செய்ய இயலும் இதற்காக ஒரு சொருகுநிரல் ஒன்று உள்ளது இதனை நீங்கள் நம் க்ரோமில் நிறுவவேண்டும் அவ்வளவு தான் நாம் டீம் வீயூவேரை இயக்குவதுபோல இந்த மென்பொருளையும் இயக்கலாம் மேலும் இது உலாவியில் இயங்குகிறது.


    இதனை பதிவிறக்க : CHROME REMOTE DESKTOP

    இதனை மேலே குறிபிட்டுள்ள தளத்திற்கு சென்று தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உலாவியை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள்.


    பின்னர் அந்த நிரலை திறந்து ALLOW என்பதை சொடுக்குங்கள்.அதில் SHARE THIS COMPUTER என்ற பொத்தான் இருக்கும் இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர் உங்கள் கணினியை இயக்கலாம் அந்த பொத்தானை சொடுக்கினால் உங்கள் கணினிக்கான எண் உங்களுக்கு வழங்கப்படும் பின்னர் அதை நீங்கள் உங்கள் நண்பரிடம் அழித்து உங்கள் கணினியை அவர் அணுக விடலாம்.






    நீங்கள் உங்கள் நண்பரின் கணினியை அணுகுவதற்கு SHARE THIS COMPUTER பொத்தானுக்கு கீழே ACCESS A SHARED COMPUTER என்ற பொத்தானை அழுத்துங்கள் பின்னர் வரும் சொற்ப்பெட்டியில் உங்கள் நண்பரின் கணினி எண்ணை அழித்து CONNECT என்பதை அழுத்துங்கள் அவ்வளவு தான் உங்கள் நண்பரின் கணினியை நீங்கள் பார்வையிடலாம்.








    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

    Sunday, October 9, 2011

    படங்களில் இருந்து எழுத்துக்களை மட்டும் பிரித்து எடுக்க ! !

    0 comments
    இப்பொழுது எல்லா வகையான செயல்களுக்கும் மென்பொருள்கள் வந்துவிட்டது உதாரணத்திற்கு நாம் ஒரு பக்கத்திற்கு ஒரு ஆவணத்தை தட்டாசு செய்ய வேண்டுமென்றால் அதை நாம் வாசித்தால் போதும் அதை கணினியே தட்டாசு செய்கிறது சில மென்பொருள்களின் உதவியோடு இதுமட்டுமல்ல இன்னும் பல கடினமான வேலைகளை மிக விரைவாகவும் எளிதாகவும் செய்யலாம். அந்த மாதிரியான மென்பொருள்தான் இது ஒரு படத்தில் உள்ள எழுத்துக்களை படத்தில் இருந்து மிக எளிதாக காப்பி செய்து விடலாம்.

    இந்த மென்பொருள் மூலம் ஒரு படத்தில் பல எழுத்துகள் இருந்தால் அதில் குறிப்பிட்ட சில எழுத்துக்களை மட்டும் நாம் காப்பி செய்து அதனை ஒரு நோட்பேடிலோ அல்லது வோர்ட் ஆவணத்திலோ(DOCUMENTS) பேஸ்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இதனை பயன்படுத்துவதும் மிகவும் எளிது.

    இந்த மென்பொருளை பதிவிறக்க : GT TEXT

    இதனை பயன்படுத்த :


    • மேலே உள்ள தளத்திற்கு சென்று இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
    • பின்னர் இந்த மென்பொருளை திறந்து எந்த படத்தில் இருந்து எழுத்துகளை காப்பி செய்ய வேண்டுமோ அந்த படத்தை தேர்வு செய்யுங்கள்.
    • உங்கள் படம் திறக்க படும் அதில் உங்கள் சுட்டியை இடது கிளிக் செய்து இழுங்கள் உங்களுக்கு தேவையான வற்றை தேர்வு செய்யுங்கள்.
    • பின்னர் கையை எடுங்கள் ஒரு சின்ன விண்டோ வரும் அதில் நீங்கள் தேர்வு செய்த எழுத்துக்களுடன் பொத்தான்களும் இருக்கும்.
    • நீங்கள் தேர்வு செய்தது சரியாக வந்துவிட்டால் CONTINUE என்ற பொத்தனை அழுத்துங்கள் உங்கள் எழுத்துக்கள் காப்பி ஆகிவிடும் பின்னர் அதனை எங்கு தேவையோ அங்கு பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
    • நீங்கள் தவறாக தேர்வு செய்துவிட்டால் CANCEL பொத்தானை அழுத்துங்கள்.



    அவ்வளவு தான் முடிந்துவிட்டது நமக்கு தேவையான எழுத்துக்களை மிக எளிதாக படங்களில் இருந்து காப்பி செய்துவிடலாம்.இந்த மென்பொருள் DTP வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

    Tuesday, October 4, 2011

    ஃபயர்ஃபாக்ஸில் குறிப்பிட்ட டேபினை மட்டும் மறைக்க ! ! ( TO HIDE TABS)

    3 comments
    ஃபயர்ஃபாக்ஸ் உலாவியை பற்றி நான் சொல்லி தெரிவதில்லை அந்த அளவுக்கு அது பிரபலமான ஒரு உலாவி இந்த உலாவியில் பல வகையான வசதிகள் இருக்கின்றன. பல வகையான உலாவிகள் வந்தாலும் இதன் பயனாளர்கள் குறைவதேயில்லை. அது மட்டுமல்ல இந்த உலாவியில் நாம் பல வகையான நீட்சிகளை நாம் நிறுவிக்கொள்ளலாம் இதன் மூலம் பல வேலைகளை நாம் மிக எளிதாக செய்து விடலாம்.

    நாம் பார்கபோகும் நீட்சி சற்று வித்தியாசமானது இதன் மூலம் நாம் சில ரகசிய வேலைகள் செய்யலாம். இந்த நீட்சியானது நாம் உலவிக்கொண்டு இருக்கும் டேபினை மறைக்கிறது. யாராவது நாம் உலாவுவதை பார்க்க கூடாது என்று எண்ணினால் நீங்கள் இந்த நீட்சியை பயபடுத்தலாம்.

    நீங்கள் ஒரு டேபினை மறைத்து விட்டால் அது நம் உலாவியின் ADD ON  டூல்பாரில் மறைந்து இருக்கும். இதனால் நீங்கள் வேலை செய்யும்போது யாரவது குறுகிட்டால் அல்லது அழைத்தால் நீங்கள் அதனை மறைத்து வைத்துவிட்டு செல்லலாம் மற்றவர்கள் பார்த்தால் நீங்கள் மறைக்காத பக்கங்கள் மட்டுமே தெரியும். உங்களுக்கு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது அதனை திறந்து பார்க்கலாம்.

    இதனை தரவிறக்க : HIDE TAB





    இதனை பயன்படுத்த : 



    • மேலே உள்ள சுட்டியை சொடுக்கி இதனை நிறுவிக் கொள்ளுங்கள்
    • பின்னர் நீங்கள் பக்கத்தை மறைக்க CTRL + Q என்று அழுத்தினால் உங்கள் பக்கம் மறைந்துவிடும்.
    • மறைத்த பக்கத்தை மறுபடியும் திறக்க உங்கள் உலாவியின் கீழே வலது புறத்தில் சிகப்பு நிறத்தில் உள்ள இடத்தை அழுத்துங்கள் நீங்கள் மறைத்து வைத்த எல்லாப் பக்கங்களும் வரும்.
    • அதனை அழுத்தி நீங்கள் மறைத்த பக்கங்களை மறுபடியும் பார்க்கலாம்.


    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !





    Sunday, October 2, 2011

    கூகிள் க்ரோமை அலங்கரிக்க சில நீட்சிகள் ( ADD ONS)

    3 comments
    கூகிள் நிறுவனம் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் இந்த நிறுவனமானது தினம் தினம் புதிய மற்றும் ஏராளமான வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. இந்த பதிவு அதிகமாக பயன்படுத்த படும் கூகுளின் க்ரோம் பற்றியது தான். நம்மில் பலரும் இந்த உலாவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த உலாவியை அழகாக்க பல நீட்சிகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்.




    1. ஸ்பீட் டயல் : 

    இந்த நீட்சி பற்றி ஏராளமானவர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த நீட்சி மூலம் நாம் சில தளங்களுக்கு எண்களை அழிக்கலாம். பின்னர் அந்த தளத்திற்கு செல்ல நீங்கள் அந்த எண்னினை தட்டாசு செய்து ENTER பொத்தனை அழுத்தினால் போதும். உடனே உங்கள் உலாவி உங்களை அந்த இணைய தளத்திற்கு கொண்டு சென்றுவிடும்.





    2.புக் மார்க்குகளுக்கான நீட்சி : 

    இந்த நீட்சி உங்கள் உலாவியின் முகப்பு பக்கத்தை அழகாக மாற்றுகிறது இந்த நீட்சி உங்களின் புக் மார்க்குகளை அழகாக ஒரு பட்டியலிட்டு அதனை உங்கள் உலாவியின் நடுவில் வைக்கிறது.மேலும் இந்த நீட்சி நீங்கள் கடைசியாக பயன்படுத்திய பக்கங்களையும் மூடிய பக்கங்களை பட்டியலிடுகிறது. அதுமட்டுமல்ல நீங்கள் இதில் குறிப்புகளை எழுதி நேரடியாக ஜிமெயிலில் பதிவு செய்யலாம். இதற்கும் இந்த நீட்சி பயன்படுகிறது.







    3. புது டேபின் பின்புல படத்தினை மாற்ற : 

    இந்த நீட்சி மூலம் நாம் நம் டேபின் பின்னால் உள்ள படத்தை மிக எளிதாக மாற்றலாம். இதில் FLICKR - இல் உள்ள படத்தை உங்கள் டேபின் பின்னணியில் வைக்கலாம். இதனால் நீங்கள் ஒவ்வொரு முறை புதிய டேபினை திறக்கும் போதும் உங்களுக்கு பிடித்த படம்தான் வரும்.




    குறிப்பு : அதன் பக்கத்திருக்கு செல்ல தலைப்பில் சொடுக்குங்கள் 




    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !





    Saturday, September 24, 2011

    விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக ஆக மாற்ற

    3 comments
    நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.

    நாம் விண்டோவ்சின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக அப்பிளை போல மாற்றலாம் இதற்க்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும் பின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

    இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.

    இதனை பதிவிறக்க :  MAC OSX LION

    மேலே உள்ள சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள் இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணினியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.

    இதனை பெருவதற்க்கு உங்கள் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள் அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.

    இப்படி இருக்கும் உங்கள் விண்டோ :




    இப்படி  ஆகிவிடும் :





    இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினி முதலில் இருந்தது போல மாறிவிடும். 


    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !




    Tuesday, September 20, 2011

    VLC மூலம் வீடியோக்களின் வடிவத்தை மாற்ற ( CONVERTING VIDEOS)

    5 comments
    VLC MEDIA PLAYER-ஐ பற்றி தெரியாதவர்கள் இருக்க இயலாது அந்த அளவுக்கு இந்த பிளேயர் புலமை பெற்றுவிட்டது. இதன் மூலம் நாம் எந்த வடிவமுள்ள கோப்பினையும் பார்வையிடலாம் இது தான் இதன் மிகப்பெரிய அனுகூலமாகும். இதனாலே இந்த மென்பொருளை அனைவரும் விரும்புகின்றனர். அதுமட்டுமல்ல இதில் ஏராளமான பயன்பாடுகளும் உள்ளது இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதை படிக்க இங்கே அழுத்துங்கள்.

    நம்மில் பலர் வீடியோவின் வடிவத்தை மாற்றுவதை ஒரு வேலையாகவே செய்வோம். அதன் வடிவத்தை ஒவ்வொரு கைபேசிக்கும் ஏற்றவாறு அல்லது அதனை ஆடியோ கோப்பாகவோ மாற்றுவோம். இதற்காக பல வகையான கோப்புகளையும் நிறுவி வைத்திருப்போம். ஆனால் அந்த வேலைகளை VLC யின் மூலமாகவும் நாம் பார்க்கலாம் அது பற்றி பார்ப்போம்.

    VLC யின் மூலம் வீடியோ கோப்பின் வடிவத்தை நாம் மிகவும் எளிதாக மாற்றலாம்.

    அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது :



    • முதலில் VLC-ஐ திறந்து கொள்ளுங்கள்.
    • பின்னர் அதில் MEDIA  >  CONVERT/SAVE என்பதை அழுத்துங்கள் அல்லது CTRL + R அழுத்துங்கள் 



    • பின்னர் கோப்பினை ADD பொத்தானை அழுத்தி தேர்வு செய்து கொள்ளுங்கள்.
    • பின்னர் கீழே உள்ள CONVERT/SAVE அருகில் உள்ள முக்கோண பொத்தானை அழுத்தி CONVERT என்பதை தேர்வு செய்யுங்கள்.



    • ஒரு புது விண்டா திறக்கும் அதில் DESTINATION FOLDER என்பதில் இடத்தை தேர்வு செய்யுங்கள்.
    • அதன் கீழே உள்ள PROFILE என்பதில் வடிவத்தை தேர்வு செய்து CONVERT ஐ அழுத்துங்கள் 

    இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் வீடியோவை ஆடியோவாக கூட மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

    Monday, September 19, 2011

    யூடியுப்பில் வீடியோவின் ஏற்று நேரத்தை ( LOADING TIME ) குறைக்க ! !

    8 comments
     யூடியுப் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது இந்த தளத்தில் இல்லாத வீடியோக்களே கிடையாது என்று கூட கூறலாம் அந்த அளவுக்கு இதில் வீடியோக்கள் குவிந்துள்ளது அதிகமாக பார்வையிடும் தளங்களில் இதுவும் ஒன்று. இதில் சாதரண வீடியோ முதல் HD வீடியோ வரை இல்லா விதமான வீடியோவும் இருக்கிறது. இந்த தளத்தை பற்றி பேசிக்கொண்டே போகலாம் ஆனால் இதில் இருக்கும் ஒரே பிரச்சனை நாம் வீடியோவை பார்க்கும்போது ரொம்ப நேரம் லோட் ஆகும்.

    இது நம் இணைப்பை பொறுத்தது தான். இதற்க்கு இந்த தளமே ஒரு தீர்வை தருகிறது. நாம் ஒரு 5 நிமிடம் வீடியோவை பார்க்க 10 நிமிடம் காத்திருக்க வேண்டும் இதனை அறிந்த யூடியுப் தளம் FEATHER என்ற ஒரு வசதியை அறிமுகபடுத்தி உள்ளது இது வீடியோவின் ஏற்று நேரத்தை குறைக்கிறது. இதனால் நாம் வீடியோவை எந்த இடையுறும் இல்லாமல் பார்க்கலாம். இதை இந்தியாவில் கூகிள் அறிமுகபடுத்தியுள்ளது.




    இந்த வசதியை பெருவதற்க்கு இதை அழுத்துங்கள் .


    பின்னர் JOIN FEATHER BETA என்பதை அழுத்துங்கள். அவ்வளவு தான் இனிமேல் நீங்கள் வழக்கம்போல யூட்யுபை பார்வையிடலாம் சற்று வேகமாக.



    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

    Thursday, September 15, 2011

    இணையத்தில் மற்ற பக்கங்களை பார்க்கும்போதும் யூடியுப் வீடியோ பார்க்க

    2 comments
    இணையத்தில் யூடியுப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே இயலாது. யூடியுப் என்பது இணயத்தில் வீடியோக்களை பகிரும் மிகப்பெரிய தளம். இந்த தளத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்த கிடக்கிறது. இதில் இருந்து வீடியோக்களை பதிவிறக்க பல வலிகள் உள்ளது அதுமட்டுமல்லாது பல வகையான நீட்சிகளும் உள்ளது. ஆனால் நாம் பார்க்கபோகும் நீட்சி சற்றே வித்தியாசமானது.

    நாம் ஒரு வீடியோவை இணையத்தில் பார்க்கும்போது அதை மட்டும் இருந்து பார்ப்பதில்லை மற்ற வேலைகளையும் செய்வோம் அந்த நேரங்களில் நாம் வீடியோவை நிறுத்திவிட்டு மற்ற வேலைகளை பார்ப்போம் பின்னர் நம் வேலைகளை முடித்துவிட்டு அந்த வீடியோவை பார்ப்போம். இதனால் நமக்கு நேரம் தான் வீணாகிறது. நாம் ஏன் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யக்  கூடாது ஆம் நாம் இணையத்தில் மற்ற பக்கத்தை பார்க்கும்போதும் அல்லது கணினியில் மற்ற வேலைகளை செய்யும்போதும் யூடியுப் வீடியோக்களை பார்க்கலாம்.

    இதற்க்கு ஒரு நீட்சி நமக்கு உதவுகிறது இது கூகுளின் க்ரோம் ( GOOGLE CHROME) உலாவிக்கானது. இந்த நீட்சியின் மூலம் நாம் நம் டெஸ்க்டாப்பில் மற்ற வேலைகளை செய்யும்போது அல்லது மற்ற தளங்களை பார்வையிடும் போது கூட வீடியோக்களை கண்டுகளிக்கலாம். இந்த நீட்சி வீடியோவை சிறிதாக நம் டெஸ்க்டாப்பின் வலது பக்கத்தில் வைக்கிறது இதனால் நீங்கள் உங்கள் வேலையை செய்யும்போது இதனை பார்க்கலாம்.





    இதனை பதிவிறக்க : PICTURE-IN-PICTURE 

    இதனை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். இதனை நிறுவியவுடன் வீடியோவிற்கு கீழே PIP என்ற பொத்தான் தோன்றும். அதை அழுத்தினால் நீங்கள் பார்க்கும் வீடியோ சிறியதாக உங்கள் டெஸ்க்டாப்பின் வலது பக்கத்தில் தோன்றும். உங்களுக்கு தேவைப்படும்போது நீங்கள் அதை நீங்கள் பார்வையிடலாம்.




    அதுமட்டுமல்ல நீங்கள் ஒவ்வொரு முறை PIP பொத்தானை அழுத்தும்போதும் வீடியோ ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி கொண்டே போகும். நீங்கள் வீடியோவை இயக்கிவிட்டு நீங்கள் விரும்பும் பக்கதுக்கோ அல்லது உங்கள் வேலைகளை செய்யலாம்.





    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

    Monday, September 12, 2011

    விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம் ! !

    5 comments
    கணினி என்று சொன்னால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதில் நிறுவப்படும் மென்பொருள்கள் தான். இணையத்தில் நாம் அதை தேடி கண்டுபிடித்து நிறுவிக்கொள்வோம். ஆனால் சில மென்பொருள்களை நாம் தேடுவது சற்று கடினமான விஷயம் அந்த நேரங்களில் நாம் தேடுபொறியின் உதவியை நாடுவோம். ஆனால் சில மென்பொருள்களை எப்படி தேடுவது என்று நமக்கு தெரியாது அந்த மாதிரியான தருணங்களில் நமக்கு ஒரு தளம் கைகொடுக்கும்.

    இதுவும் ஒரு தேடுபொறி தான் ஆனால் இதில் முன்னிருப்பாக பல வகையான ஆன்லைன் சேவைகள் பட்டியலிடப் பட்டுள்ளது. ஒவ்வோற்றின் வகை மற்றும் இயல்பை பொறுத்து வகைபடுத்தப் பட்டு சேவைகள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.




    இதில் நீங்கள் எதாவது தேர்வு செய்தால் அதன் வகையை பொறுத்து உங்களுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் மென்பொருள் அல்லது வலைத்தளம் காண்பிக்கப்படும் அதை வைத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.




    அதுமட்டுமல்ல நீங்கள் இதில் உங்கள் சாதனங்கள் மற்றும் இயங்குதளம் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலாம். நீங்கள் உங்கள் கைபேசிக்கான மென்பொருள் அல்லது உங்கள் ஐ-போனுக்கான மென்பொருள்களை மட்டும் தேடலாம்.இந்த தளத்தில் ஒரு மென்பொருளை மற்ற மென்பொருளுடன் ஒப்பிட்டு காட்டுகின்றனர். இதில் நீங்கள் குறிச்சொற்கள் கொடுத்தும் தேடலாம்  அதற்கும் இந்த நமக்கு உதவுகிறது.



    தளத்திற்கு செல்லுவதற்கு : www.catchfree.com





    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !







    Sunday, September 11, 2011

    உங்களுக்கு தில் இருக்கா இதை ட்ரை பண்ணுங்க ?

    6 comments
    உங்கள் நண்பர்களிடம் நீங்கள் அதிகம் விளையாடுவீர்களா ? அவர்களை அதிகம் பயமுறுத்துவீர்களா ? அல்லது உங்களுக்கு யாரையாவது பயமுறுத்த வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க. இது ஒரு சின்ன இணைய தந்திரம் இதன் மூலம் நீங்கள் யாரை வேண்டுமானாலும் பயமுறுத்தலாம் சரி எப்படி பயமுறுத்த அது ரொம்ப ஈஸி பாஸ். எப்பவும் போல இதுக்கும் கூகிள் தான் பயன்படுத்த போறோம் வேற என்ன பண்ண ( வேற வழியில்ல ).உங்கள் நண்பர்களை பயமுறுத்த ஒரு சிறிய நுணுக்கம்.

    இதை செய்வதற்கு :

    • முதலில் கூகிள் தளத்திற்கு செல்லுங்கள் .
    • பின்னர் இதை தட்டாசு செய்யுங்கள் ru mov0001.swf .
    • பின்னர் I'M FEELING LUCKY பொத்தானை அழுத்துங்கள். அல்லது SEARCH பொத்தானை அழுத்தி அதில் வரும் முதல் சுட்டியை சொடுக்குங்கள்.

    HEART PATIENTS BE CAREFUL






    அதில் வரும் படத்தை ஆடியோவுடன் பார்த்து மகிழுங்கள். (ஏதோ என்னால முடிந்தது ). இதன் லின்க்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் மகிழ செய்யுங்கள்.திடிர்னு பார்த்த இல்லாரும் பயப்பட தான் செய்வாங்க இதய நோயாளிகள் இதை தவிர்த்துகொள்ளுங்கள்.





    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !




    Saturday, September 10, 2011

    வாருங்கள் கூகிளுடன் கொஞ்சம் விளையாடாலம் ! !

    4 comments
    இணையத்தில் பல வகையான தகவல்கள் இருக்கிறது ஆனால் அவற்றை நாம் ஒவ்வொன்றாக தேடி தேடித் தான் படிக்கவேண்டும். இதற்க்கு தான் நமக்கு தேடுபொறிகள் பயன்படுகிறது. தேடுபொறி என்ற உடனே நமக்கு ஞாபகம் வருவது கூகிள் தான். கூகுளின் தேடுபொறி பற்றி நான் சொல்லி தெரிவதில்லை இணையத்தை யார் பயன்படுத்தினாலும் ஒரு தடவையாவது கூகிள்க்கு சென்று விடுவார்கள் அந்த அளவுக்கு இல்லோரும் அதனை விரும்புகின்றனர் மற்றும் பயன்படுத்துகின்றனர். இந்த கூகிள் பற்றி நிறைய விஷயங்கள் புதிதாக பலரும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.


    சரி கூகிளுடன் எப்படி விளையாடுவது அதை பற்றி பார்ப்போம்

    • கூகுளை முதலில் திறந்து அதில் GOOGLE GRAVITY என தட்டாசு செய்யுங்கள் .
    • பின்னர் அதன் கீழே உள்ள I'M FEELING LUCKY பொத்தானை அழுத்துங்கள்.
    • ஒரு தளத்திற்கு செல்லும் அங்கே பாருங்கள் கூகிள் தேடுபொறி எப்படி இருக்கிறது என்று.
    • சிறந்த விஷயம் என்னவென்றால் நாம் இதிலும் குறிச்சொல்லை கொடுத்து தேடலாம் .
    • அதுமட்டுமல்ல நீங்கள் உங்கள் சுட்டியை பயன்படுத்தி அதில் உள்ள சொற்கள் மட்டும் பெட்டிகளை இழுத்து விளையாடலாம். 

    இந்த தளத்திற்க்கு செல்ல : இங்கே சொடுக்கவும்








    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !



    Related Posts Plugin for WordPress, Blogger...
     

    NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

    Blogger Widgets