skip to main | skip to sidebar

Saturday, September 24, 2011

விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக ஆக மாற்ற

3 comments
நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.

நாம் விண்டோவ்சின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக அப்பிளை போல மாற்றலாம் இதற்க்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும் பின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.

இதனை பதிவிறக்க :  MAC OSX LION

மேலே உள்ள சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள் இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணினியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.

இதனை பெருவதற்க்கு உங்கள் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள் அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.

இப்படி இருக்கும் உங்கள் விண்டோ :




இப்படி  ஆகிவிடும் :





இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினி முதலில் இருந்தது போல மாறிவிடும். 


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !




Tuesday, September 20, 2011

VLC மூலம் வீடியோக்களின் வடிவத்தை மாற்ற ( CONVERTING VIDEOS)

5 comments
VLC MEDIA PLAYER-ஐ பற்றி தெரியாதவர்கள் இருக்க இயலாது அந்த அளவுக்கு இந்த பிளேயர் புலமை பெற்றுவிட்டது. இதன் மூலம் நாம் எந்த வடிவமுள்ள கோப்பினையும் பார்வையிடலாம் இது தான் இதன் மிகப்பெரிய அனுகூலமாகும். இதனாலே இந்த மென்பொருளை அனைவரும் விரும்புகின்றனர். அதுமட்டுமல்ல இதில் ஏராளமான பயன்பாடுகளும் உள்ளது இதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தேன் அதை படிக்க இங்கே அழுத்துங்கள்.

நம்மில் பலர் வீடியோவின் வடிவத்தை மாற்றுவதை ஒரு வேலையாகவே செய்வோம். அதன் வடிவத்தை ஒவ்வொரு கைபேசிக்கும் ஏற்றவாறு அல்லது அதனை ஆடியோ கோப்பாகவோ மாற்றுவோம். இதற்காக பல வகையான கோப்புகளையும் நிறுவி வைத்திருப்போம். ஆனால் அந்த வேலைகளை VLC யின் மூலமாகவும் நாம் பார்க்கலாம் அது பற்றி பார்ப்போம்.

VLC யின் மூலம் வீடியோ கோப்பின் வடிவத்தை நாம் மிகவும் எளிதாக மாற்றலாம்.

அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது :



  • முதலில் VLC-ஐ திறந்து கொள்ளுங்கள்.
  • பின்னர் அதில் MEDIA  >  CONVERT/SAVE என்பதை அழுத்துங்கள் அல்லது CTRL + R அழுத்துங்கள் 



  • பின்னர் கோப்பினை ADD பொத்தானை அழுத்தி தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • பின்னர் கீழே உள்ள CONVERT/SAVE அருகில் உள்ள முக்கோண பொத்தானை அழுத்தி CONVERT என்பதை தேர்வு செய்யுங்கள்.



  • ஒரு புது விண்டா திறக்கும் அதில் DESTINATION FOLDER என்பதில் இடத்தை தேர்வு செய்யுங்கள்.
  • அதன் கீழே உள்ள PROFILE என்பதில் வடிவத்தை தேர்வு செய்து CONVERT ஐ அழுத்துங்கள் 

இந்த மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் வீடியோவை ஆடியோவாக கூட மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

Monday, September 19, 2011

யூடியுப்பில் வீடியோவின் ஏற்று நேரத்தை ( LOADING TIME ) குறைக்க ! !

8 comments
 யூடியுப் பற்றி அறியாதவர்கள் இருக்க இயலாது இந்த தளத்தில் இல்லாத வீடியோக்களே கிடையாது என்று கூட கூறலாம் அந்த அளவுக்கு இதில் வீடியோக்கள் குவிந்துள்ளது அதிகமாக பார்வையிடும் தளங்களில் இதுவும் ஒன்று. இதில் சாதரண வீடியோ முதல் HD வீடியோ வரை இல்லா விதமான வீடியோவும் இருக்கிறது. இந்த தளத்தை பற்றி பேசிக்கொண்டே போகலாம் ஆனால் இதில் இருக்கும் ஒரே பிரச்சனை நாம் வீடியோவை பார்க்கும்போது ரொம்ப நேரம் லோட் ஆகும்.

இது நம் இணைப்பை பொறுத்தது தான். இதற்க்கு இந்த தளமே ஒரு தீர்வை தருகிறது. நாம் ஒரு 5 நிமிடம் வீடியோவை பார்க்க 10 நிமிடம் காத்திருக்க வேண்டும் இதனை அறிந்த யூடியுப் தளம் FEATHER என்ற ஒரு வசதியை அறிமுகபடுத்தி உள்ளது இது வீடியோவின் ஏற்று நேரத்தை குறைக்கிறது. இதனால் நாம் வீடியோவை எந்த இடையுறும் இல்லாமல் பார்க்கலாம். இதை இந்தியாவில் கூகிள் அறிமுகபடுத்தியுள்ளது.




இந்த வசதியை பெருவதற்க்கு இதை அழுத்துங்கள் .


பின்னர் JOIN FEATHER BETA என்பதை அழுத்துங்கள். அவ்வளவு தான் இனிமேல் நீங்கள் வழக்கம்போல யூட்யுபை பார்வையிடலாம் சற்று வேகமாக.



இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

Thursday, September 15, 2011

இணையத்தில் மற்ற பக்கங்களை பார்க்கும்போதும் யூடியுப் வீடியோ பார்க்க

2 comments
இணையத்தில் யூடியுப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே இயலாது. யூடியுப் என்பது இணயத்தில் வீடியோக்களை பகிரும் மிகப்பெரிய தளம். இந்த தளத்தில் பல ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்த கிடக்கிறது. இதில் இருந்து வீடியோக்களை பதிவிறக்க பல வலிகள் உள்ளது அதுமட்டுமல்லாது பல வகையான நீட்சிகளும் உள்ளது. ஆனால் நாம் பார்க்கபோகும் நீட்சி சற்றே வித்தியாசமானது.

நாம் ஒரு வீடியோவை இணையத்தில் பார்க்கும்போது அதை மட்டும் இருந்து பார்ப்பதில்லை மற்ற வேலைகளையும் செய்வோம் அந்த நேரங்களில் நாம் வீடியோவை நிறுத்திவிட்டு மற்ற வேலைகளை பார்ப்போம் பின்னர் நம் வேலைகளை முடித்துவிட்டு அந்த வீடியோவை பார்ப்போம். இதனால் நமக்கு நேரம் தான் வீணாகிறது. நாம் ஏன் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யக்  கூடாது ஆம் நாம் இணையத்தில் மற்ற பக்கத்தை பார்க்கும்போதும் அல்லது கணினியில் மற்ற வேலைகளை செய்யும்போதும் யூடியுப் வீடியோக்களை பார்க்கலாம்.

இதற்க்கு ஒரு நீட்சி நமக்கு உதவுகிறது இது கூகுளின் க்ரோம் ( GOOGLE CHROME) உலாவிக்கானது. இந்த நீட்சியின் மூலம் நாம் நம் டெஸ்க்டாப்பில் மற்ற வேலைகளை செய்யும்போது அல்லது மற்ற தளங்களை பார்வையிடும் போது கூட வீடியோக்களை கண்டுகளிக்கலாம். இந்த நீட்சி வீடியோவை சிறிதாக நம் டெஸ்க்டாப்பின் வலது பக்கத்தில் வைக்கிறது இதனால் நீங்கள் உங்கள் வேலையை செய்யும்போது இதனை பார்க்கலாம்.





இதனை பதிவிறக்க : PICTURE-IN-PICTURE 

இதனை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். இதனை நிறுவியவுடன் வீடியோவிற்கு கீழே PIP என்ற பொத்தான் தோன்றும். அதை அழுத்தினால் நீங்கள் பார்க்கும் வீடியோ சிறியதாக உங்கள் டெஸ்க்டாப்பின் வலது பக்கத்தில் தோன்றும். உங்களுக்கு தேவைப்படும்போது நீங்கள் அதை நீங்கள் பார்வையிடலாம்.




அதுமட்டுமல்ல நீங்கள் ஒவ்வொரு முறை PIP பொத்தானை அழுத்தும்போதும் வீடியோ ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி கொண்டே போகும். நீங்கள் வீடியோவை இயக்கிவிட்டு நீங்கள் விரும்பும் பக்கதுக்கோ அல்லது உங்கள் வேலைகளை செய்யலாம்.





இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !

Monday, September 12, 2011

விரைவாக மென்பொருள்களை தேடுவதற்கு ஒரு தளம் ! !

5 comments
கணினி என்று சொன்னால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதில் நிறுவப்படும் மென்பொருள்கள் தான். இணையத்தில் நாம் அதை தேடி கண்டுபிடித்து நிறுவிக்கொள்வோம். ஆனால் சில மென்பொருள்களை நாம் தேடுவது சற்று கடினமான விஷயம் அந்த நேரங்களில் நாம் தேடுபொறியின் உதவியை நாடுவோம். ஆனால் சில மென்பொருள்களை எப்படி தேடுவது என்று நமக்கு தெரியாது அந்த மாதிரியான தருணங்களில் நமக்கு ஒரு தளம் கைகொடுக்கும்.

இதுவும் ஒரு தேடுபொறி தான் ஆனால் இதில் முன்னிருப்பாக பல வகையான ஆன்லைன் சேவைகள் பட்டியலிடப் பட்டுள்ளது. ஒவ்வோற்றின் வகை மற்றும் இயல்பை பொறுத்து வகைபடுத்தப் பட்டு சேவைகள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.




இதில் நீங்கள் எதாவது தேர்வு செய்தால் அதன் வகையை பொறுத்து உங்களுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் மென்பொருள் அல்லது வலைத்தளம் காண்பிக்கப்படும் அதை வைத்து நீங்கள் தேர்வு செய்யலாம்.




அதுமட்டுமல்ல நீங்கள் இதில் உங்கள் சாதனங்கள் மற்றும் இயங்குதளம் ஆகியவற்றை குறிப்பிட்டும் தேடலாம். நீங்கள் உங்கள் கைபேசிக்கான மென்பொருள் அல்லது உங்கள் ஐ-போனுக்கான மென்பொருள்களை மட்டும் தேடலாம்.இந்த தளத்தில் ஒரு மென்பொருளை மற்ற மென்பொருளுடன் ஒப்பிட்டு காட்டுகின்றனர். இதில் நீங்கள் குறிச்சொற்கள் கொடுத்தும் தேடலாம்  அதற்கும் இந்த நமக்கு உதவுகிறது.



தளத்திற்கு செல்லுவதற்கு : www.catchfree.com





இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !







Sunday, September 11, 2011

உங்களுக்கு தில் இருக்கா இதை ட்ரை பண்ணுங்க ?

6 comments
உங்கள் நண்பர்களிடம் நீங்கள் அதிகம் விளையாடுவீர்களா ? அவர்களை அதிகம் பயமுறுத்துவீர்களா ? அல்லது உங்களுக்கு யாரையாவது பயமுறுத்த வேண்டுமா இதை ட்ரை பண்ணுங்க. இது ஒரு சின்ன இணைய தந்திரம் இதன் மூலம் நீங்கள் யாரை வேண்டுமானாலும் பயமுறுத்தலாம் சரி எப்படி பயமுறுத்த அது ரொம்ப ஈஸி பாஸ். எப்பவும் போல இதுக்கும் கூகிள் தான் பயன்படுத்த போறோம் வேற என்ன பண்ண ( வேற வழியில்ல ).உங்கள் நண்பர்களை பயமுறுத்த ஒரு சிறிய நுணுக்கம்.

இதை செய்வதற்கு :

  • முதலில் கூகிள் தளத்திற்கு செல்லுங்கள் .
  • பின்னர் இதை தட்டாசு செய்யுங்கள் ru mov0001.swf .
  • பின்னர் I'M FEELING LUCKY பொத்தானை அழுத்துங்கள். அல்லது SEARCH பொத்தானை அழுத்தி அதில் வரும் முதல் சுட்டியை சொடுக்குங்கள்.

HEART PATIENTS BE CAREFUL






அதில் வரும் படத்தை ஆடியோவுடன் பார்த்து மகிழுங்கள். (ஏதோ என்னால முடிந்தது ). இதன் லின்க்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் மகிழ செய்யுங்கள்.திடிர்னு பார்த்த இல்லாரும் பயப்பட தான் செய்வாங்க இதய நோயாளிகள் இதை தவிர்த்துகொள்ளுங்கள்.





இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !




Saturday, September 10, 2011

வாருங்கள் கூகிளுடன் கொஞ்சம் விளையாடாலம் ! !

4 comments
இணையத்தில் பல வகையான தகவல்கள் இருக்கிறது ஆனால் அவற்றை நாம் ஒவ்வொன்றாக தேடி தேடித் தான் படிக்கவேண்டும். இதற்க்கு தான் நமக்கு தேடுபொறிகள் பயன்படுகிறது. தேடுபொறி என்ற உடனே நமக்கு ஞாபகம் வருவது கூகிள் தான். கூகுளின் தேடுபொறி பற்றி நான் சொல்லி தெரிவதில்லை இணையத்தை யார் பயன்படுத்தினாலும் ஒரு தடவையாவது கூகிள்க்கு சென்று விடுவார்கள் அந்த அளவுக்கு இல்லோரும் அதனை விரும்புகின்றனர் மற்றும் பயன்படுத்துகின்றனர். இந்த கூகிள் பற்றி நிறைய விஷயங்கள் புதிதாக பலரும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.


சரி கூகிளுடன் எப்படி விளையாடுவது அதை பற்றி பார்ப்போம்

  • கூகுளை முதலில் திறந்து அதில் GOOGLE GRAVITY என தட்டாசு செய்யுங்கள் .
  • பின்னர் அதன் கீழே உள்ள I'M FEELING LUCKY பொத்தானை அழுத்துங்கள்.
  • ஒரு தளத்திற்கு செல்லும் அங்கே பாருங்கள் கூகிள் தேடுபொறி எப்படி இருக்கிறது என்று.
  • சிறந்த விஷயம் என்னவென்றால் நாம் இதிலும் குறிச்சொல்லை கொடுத்து தேடலாம் .
  • அதுமட்டுமல்ல நீங்கள் உங்கள் சுட்டியை பயன்படுத்தி அதில் உள்ள சொற்கள் மட்டும் பெட்டிகளை இழுத்து விளையாடலாம். 

இந்த தளத்திற்க்கு செல்ல : இங்கே சொடுக்கவும்








இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !



Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets