LAN -இன் மூலம் நாம் ஒரு வீடு, பள்ளி, கணினி ஆய்வகம் அல்லது அலுவலக கட்டிடம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட புவியியல் பகுதியில் கணினிகள் மற்றும் சாதனங்களை இணைக்கலாம்.
அதைப்போல் நாம் கணினியை பார்மட் செய்யும் போதும் அது வைரஸினால் பாதிக்கப் பட்டிருக்கும் போதும் அதன் தரவுகளை பத்திரமாக சேமித்து வைப்பதற்கு மற்ற கணினியை தான் நாட வேண்டி இருக்கிறது . நமக்கு தேவையான கோப்புகளை நம் நண்பரின் கணினியிலோ அல்லது நமது மற்றொரு கணினியிலோ சேமிப்பது வழக்கம்.
அந்த மாதிரி நாம் தரவுகளை மாற்றும் போது நமக்கு ஒரு PENDRIVE அல்லது மேலே உள்ள வற்றை போல ஒரு LAN வேண்டும் . அதன் மூலம் நாம் தரவுகளை மாற்றிக் கொள்ளலாம் ஆனால் அது அவ்வளவு வேகமாக செயல்படும் என்பது சொல்ல முடியாது .
இந்த மாதிரி நேரத்தில் நமக்கு ஒரு மென்பொருள் கைகொடுக்கிறது அது தான் IP MESSENGER இந்த மென்பொருளானது நமக்கு தரவுகளை மிக வேகமாகவும் எளிதாகவும் பரிமாறிக் கொள்ள வழிவகுக்கிறது .இந்த மென்பொருள் செயல்பட ஒரு LAN கேபிள் மட்டும் தேவை இந்த லேன் கேபிள் மற்ற கணினியுடன் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த மென்பொருளை பதிவிறக்க :
இந்த மென்பொருளை பதிவிறக்கி அதை RUN செய்யவும் . அது உடனே டாஸ்க்பாரில் வலது பக்கத்தில் சின்ன ஐகானாக வரும் அதை இரண்டு முறை அழுத்தவும் பின்னர் அதில் உள்ள REFRESH பொத்தானை அழுத்தினால் பகிர்வில் உள்ள அனைத்து கணினியும் வரும் அதில் உங்களுக்கு தேவையான கணினிக்கு MESSAGE அனுப்பிக்கொள்ளலாம் நீங்கள் எந்த வகையான கோப்புகளையும் அனுப்பலாம்.
இதில் கோப்புகள் பரிமாற்றம் மட்டும் அல்லாது குறும்செய்திகளும் அனுப்பலாம் . இந்த மென்பொருள் CLICK & DRAG மூலம் இயங்கும் அதனால் நீங்கள் பரிமாற்ற வேண்டிய கோப்புகளை அதன் உள்ள இழுத்து போட்டு விட்டு எந்த கணினிக்கு அனுப்ப வேண்டுமோ அந்த கணினியை தேர்வு செய்து SEND என்ற பொத்தானை அழுத்தினால் போதும் உடனே அது அந்த கணினியில் பதிவிறக்கமாகும்.
முக்கியமான விசயம் என்னவென்றால் நீங்கள் எந்த கணினிக்கு தரவுகளை பரிமாறுகிர்களோ அந்த கணினியிலும் IP MESSENGER அக்டிவேட் செய்யப்பட வேண்டும்.
இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்கள் தரவுகளை குறைந்தது 10 MBPS வேகத்தில் அனுப்பலாம். எனக்கு 35 MBPS வேகத்தில் பரிமாற்றம் நடந்தது .
ஒரு LAN கேபிள் இருந்தால் போதும் எந்த இரண்டு கணினிக்கும் இணைப்பு கொடுத்து விடலாம் இந்த மென்பொருள் இரண்டு புறமும் நிறுவப் பட்டிருந்தால்.
|
0 comments:
Post a Comment
நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....