skip to main | skip to sidebar

Tuesday, July 5, 2011

ஆப்லைனில் மின்னஞ்சல் பார்க்க ! ! ! !

மின்னஞ்சல் பயன்பாடானது தற்போது அதிகரித்து கொண்டே உள்ளது.பல்வேறு நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை இலவசமாக வழங்கி வருவதே இதற்க்கு முக்கிய காரணம் . என்ன தான் இலவசமாக மின்னஞ்சல் சேவையினை பெற்றாலும் இதனை நாம் இணைய உதவியுடன் மட்டுமே அணுக முடியும் .

இணைய இணைப்பில் இல்லாத போதும் மின்னஞ்சல்களை காண முடியுமா என்றால் அதற்க்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும் ?

என்னுடைய பதில் : ஆம் முடியும்

இதற்க்கு ஒரு மென்பொருள் நமக்கு உதவுகிறது .






இதை பபதிவிறக்குவதர்க்கான சுட்டி : MAIL STORE HOME

மென்பொருளை பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும் . அதற்க்கு பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும் .பின்னர் அந்த மென்பொருளை திறந்து ARCHIVE E-MAIL என்ற பொத்தானை அழுத்தி உங்களுடைய கணக்கை தேர்வு செய்து உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும் . பின்னர் சிறிது நேரம் உங்களுடைய மின்னஞ்சல்கள் நகல் எடுக்கப்பட்டு கணினியில் சேமிக்கப்படும்.

பின் மின்னஞ்சல்களை வழக்கம் போல் நீங்கள் பார்வையிடலாம் . இந்த மென்பொருள் மூலம் நாம் மினஞ்சல்களை எளிமையாக கையாளமுடியும் . இந்த மென்பொருள் மூலம் நீங்கள் சீடி / டி.வீ.டி , பிளாஷ் டிரைவ் மற்றும்      பிற வன்தட்டுகளில் மினஞ்சல்களை சேமிக்கலாம் . மினஞ்சல்களை பேக்அப் செய்து கொள்ளவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது . இந்த மென்பொருள் ஆப்லைனில் மினஞ்சலை படிக்கவும் சேமிக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது .




இதில் இயல்பாகவே ஜிமெயிலை தான் இயக்கும் மற்ற மினஞ்சல்களுக்கு தனியாக கணக்கு உருவாக்கி கொள்ளவும்.


! ! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! !












0 comments:

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets