சமூக இணையதளங்களின் ஜாம்பவானாக FACEBOOK நிறுவனம் மாறிக்கொண்டு இருக்கிறது அந்த அளவுக்கு அந்த தளத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புகின்றனர் மற்றும் இந்த தளத்தை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அந்த அளவுக்கு FACEBOOK நிறுவனம் அதன் பயனாளர்களை தன் வசப்படுத்தி வைத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
FACEBOOK நிறுவனம் தன் தளத்தை நாளுக்கு நாள் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது இந்த தளத்தின் வாயிலாக நாம் நிறைய சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.இந்த நிறுவனம் இப்பொழுது தனது தளத்தில் சைடு பேன் மற்றும் அதன் உரையாடல் ஆகியவற்றின் தோற்றத்தை புதுபித்து உள்ளது. மற்றும் இந்த தளம் வீடியோ உரையாடலையும் தற்போது கொண்டு வந்துள்ளது இந்த சில காரணங்களாலும் இன்னும் பல காரணங்களாலும் இந்த தளம் முதன்மை பெற்று இருக்கிறது என்று கூறலாம்.
சரி விசயத்துக்கு வருவோம் முகப்புத்தகத்தில் நாம் அனைவரும் உரையாடல்களை செய்வோம் அதை பற்றியும் அதில் உள்ள சில வசிதகளை பற்றியும் தான் பார்க்க போகிறோம்.
நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கக்கூடும் . இந்த பதிவு இதனை பற்றி தெரியாதவர்களுக்கு தான்.
நாம் அனைவரும் நமது நண்பர்களுடன் உரையாடுவோம் இன்னும் சொல்ல போனால் நாம் இணையம் பயன்படுத்துவதே அதற்காகத்தானே.FACEBOOK நிறுவனம் அந்த வசதியை மிக அழகாக நமக்கு செய்து தந்துள்ளது அதில் நிறைய வசதிகளும் இருக்கிறது நாம் அதை பற்றி பார்ப்போம்.
நண்பர்களுடன் உரையாடும்போது அந்த உரையாடல் பலகையின் மேலே அமைப்பு பொத்தானை அழுத்துங்கள் அதில் சில வசதிகள் உள்ளன
இதில் முக்கியமாக இரண்டு வசதிகள் உள்ளன அவற்றை பற்றி பார்ப்போம். முதல் வசதி என்னவென்றால் SEE THE FULL CONVERSATION இந்த வசதி மூலம் நாம் அந்த நண்பருடன் எப்பொழுது எல்லாம் உரையாடல் செய்திர்களோ அதை முழுமையாகப் பார்வையிடலாம்.
நாம் ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் உரையாட முகபுத்தகத்தில் நாம் முதலில் ஒரு குழுவை உருவாக்கி அதன் பின் தான் உரையாட முடியும் என்று இருந்தது ஆனால் இப்பொழுது நாம் குழுவை உருவக்காமலே பல நண்பர்களுடன் உரையாடலாம் அதற்க்கு இந்த உரையாடல் பலகையில் வசதிகள் உள்ளது.
ஒரே நேரத்தில் பல நண்பர்களுடன் உரையாட நாம் அந்த பலகையில் வலது பக்கத்தில் உள்ள ஐகானை சொடுக்குங்கள் அதில் ADD FRIENDS TO CHAT என்ற வசதி இருக்கிறது அதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களை அதில் பட்டியல் இட்டு சேர்த்துக் கொள்ளலாம்.இதன் மூலம் நீங்கள் உரையாடுவது அந்த பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டும் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது.
இதை எப்படி செய்வது :
ADD FRIENDS TO CHAT என்ற பொத்தானை சொடுக்கவும் பின்னர் அதில் சிறிய சொற்பெட்டி வரும் அதில் உங்கள் நண்பர்களின் பெயர்களை உள்ளிடு செய்யுங்கள் பின்னர் DONE என்ற பொத்தானை சொடுக்குங்கள் உங்களுக்கான புதிய உரையாடல் விண்டோ திறந்துவிடும் அதில் நீங்கள் உரையாடலாம்.நீங்கள் யாரையாவது மறந்து விட்டால் அந்த புது விண்டோவின் மேலே உள்ள ADD FRIENDS ஐகானை சொடுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
புது விண்டோ இப்படி இருக்கும் :
அவ்வளவு தான் நீங்கள் இதில் வழக்கம் போல உரையாடலாம் .
|
0 comments:
Post a Comment
நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....