skip to main | skip to sidebar

Friday, August 5, 2011

இணையதளத்தை பற்றி படிப்பதர்க்கும் ஆராய்வதற்கும் 5 இணையதளங்கள்

நாம் அனைவரும் ஒரு இணையதளத்தை பார்வையிட்டால் அந்த தளத்தின் உரிமையாளர் மற்றும் அந்த இணையததளத்தை சார்ந்த தகவல்கள் அறிவதற்கு ஆவலாக இருப்போம். ஆனால் கூகிள் இல் சென்று அந்த தளத்தை பற்றி தேடினால் உரிமையாளர்கள் பற்றிய தகவல்கள் முழுமையாக கிடைக்காது. அந்த தளத்தில் உள்ள CONTACT -இன் மூலம் தான் அந்த தளத்தின் ஆசிரியர் பற்றியோ உரிமையாளர் பற்றியோ பார்க்கலாம் ஆனால் அதிலும் சில தகவல்கள் மட்டும் தான் இருக்கும். அதைப்போல் ஒவ்வொரு பதிவர்களும் அவர்களின் போட்டியாளர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பார்கள் அவர்களின் தளத்தின் வருவாய் அல்லது அந்த தளத்தின் மதிப்பு ஆகியவற்றை அறிய ஆவலாக இருப்பார்கள். இவற்றை அறிய சில இணையதளங்கள் நமக்கு உதவுகின்றன அதை பற்றி பார்ப்போம் .


1.ஒரு இணையதளத்தின் HOSTING PROVIDER பற்றி அறிவதற்கு :

நாம் முதலில் ஒரு வலைத்தளம் தொடங்கும் முன் எங்கே அதை ஹோஸ்ட் செய்வது என்று அனைவரும் சற்று குழம்பியிருப்போம் . ஏற்கனவே உள்ள வலைத்தளங்களை யார் ஹோஸ்ட் செய்து உள்ளனர் போன்ற விபரங்களை அறிய whoishostingthis என்ற தளம் நமக்கு உதவுகிறது .

இந்த தளத்திற்கு செல்ல : www.whoishostingthis.com

2.ஒரு தளத்தின் உரிமையாளர் பற்றிய விபரங்கள் அறிவதற்கு :

நாம் ஒரு தளத்தின் உரிமையாளர் பற்றிய விபரங்களை நாம் அறிவதற்கு இந்த who.is என்ற தளம் நமக்கு உதவுகிறது.

இந்த தளத்திற்கு செல்ல : www.who.is

3. ஒரு வலைதளத்தின் மதிப்பு மற்றும் ஆதாயம் பற்றிய விபரங்களுக்கு :

ஒரு வலைதளத்தின் மதிப்பை அறிய நிறைய தளங்கள் உள்ளன . அதில் சில உங்களுக்காக .

தளங்களுக்கு செல்ல :


1.http://www.websiteoutlook.com

2.http://www.websitevaluation.org

3.http://www.yourwebsitevalue.com/

4.http://www.sitevaluecalculator.com/

5.http://www.mywebsiteworth.com/



4. ஒரு இணையதளத்தின் ஏற்றுதல் வேகம் (LOADING SPEED) பற்றிய விபரங்களுக்கு : 


ஒரு இணையதளத்தின் ஏற்றுத்தல் வேகம் நன்றாக இருந்தால் தான் அதை பயன்படுத்த அனைவரும் முனைவார்கள் அதனால் நாம் அனைவரும் நம் தளத்தின் ஏற்றுதல் வேகத்தின் மீது ஒரு கண் வைத்துகொள்வது நல்லது. இந்த ஏற்றுதல் வேகத்தை நாம் iwebtools என்ற தளம் மூலம் நாம் கண்டறியலாம்.

இதை அறிவதற்கும் நிறைய தளங்கள் நமக்கு உதவுகின்றன .

தளத்திற்கு செல்ல : www.iwebtool.com

5. இரண்டு தளங்களின் ஏற்றுதல் வேகத்தை ஒப்பிடுவதற்கு :

இரண்டு தளங்களின் ஏற்றுதல் வேகத்தை நாம் இந்த வலைத்தளத்தில் ஒப்பிடலாம் அதற்க்கு இரண்டு தளங்களின் முகவரியையும் அதில் உள்ளீடு செய்துவிட்டு GO என்ற பொத்தானை சொடுக்கவும் . பின்னர் இரண்டு தளங்களும் அதில் வரும் அதன் மத்தியில் எந்த தளம் வேகமாக ஏற்றுதல் ஆனது என்பது வரும் .

தளத்திற்கு செல்ல : www.whichloadsfaster.com





இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்













1 comments:

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets