கணினியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கணினியின் விசைபலகயை பாராமல் தட்டாசு செய்ய ஆசைபடுவார்கள் . சிலர் இதற்காக தட்டாசு பயில தட்டாசு ஆசிரியரிடமோ அல்லது தட்டாசு செய்ய சொல்லி கொடுக்கும் பயிலகதிர்க்கு செல்லுவோம்.
நாம் தட்டாசு பயில அதிகாலை அல்லது அதற்கு என்று நேரம் ஒத்துக்க வேண்டி உள்ளது . நம்மில் சிலருக்கு வெளிய போக நேரம் கூட இருக்காது.
அவ்வாறு உள்ள சிலருக்காக சில நிறுவனங்கள் தட்டாசு பயிலுவதற்காக பல வகையான மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் இலவசமாகவும், பதிவிறக்கி கொள்ள வழிவகுத்து இருக்கிறது.
ஆனால் இதை நாம் பதிவிறக்கி நிறுவிக்கொண்டு அதன் பின் அதில் வரும் பாடங்களை ஒவ்வொன்றாக நாம் பயில வேண்டும் .
இப்போது அதை விட எளிதான முறை வந்துவிட்டது.நாம் இணையத்திலேயே தட்டாசு பயிலலாம் இதற்க்கு நிறைய இணையதளங்கள் வழிவகுக்கிறது. ஒவ்வொரு தளத்திலும் பாடங்கள் இருக்கும் இது தளத்திற்கு தளம் மாறும் .
இந்த தளங்களில் நிறைய பாடங்கள் உள்ளன. அந்த பாடங்களை தொடர்ந்து கற்றுக்கொண்டு வந்தால் நாம் எளிதில் தட்டாசு பயின்று விடலாம் யார் உதவியும் இல்லாமல்.
இதோ அதற்க்கான சில தளங்கள் :
1.Sense Lang
2.Power Typing
3.Dvorak
4.Typing-Lessons
5.Typing Test
இதை போன்ற நிறைய தளங்கள் நமக்கு ஆன்லைனில் தட்டாசு பயில உதவுகிறது.
சாதாரண விசைப்பலகை மற்றும் அல்லாமல் கைபேசியில் உள்ள QWERTY என்னும் விசைபலகையும் நாம் இந்த தளங்களில் தட்டாசு பயிலலாம்.
|
0 comments:
Post a Comment
நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....