skip to main | skip to sidebar

Sunday, October 2, 2011

கூகிள் க்ரோமை அலங்கரிக்க சில நீட்சிகள் ( ADD ONS)

கூகிள் நிறுவனம் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் இந்த நிறுவனமானது தினம் தினம் புதிய மற்றும் ஏராளமான வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. இந்த பதிவு அதிகமாக பயன்படுத்த படும் கூகுளின் க்ரோம் பற்றியது தான். நம்மில் பலரும் இந்த உலாவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த உலாவியை அழகாக்க பல நீட்சிகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்.




1. ஸ்பீட் டயல் : 

இந்த நீட்சி பற்றி ஏராளமானவர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த நீட்சி மூலம் நாம் சில தளங்களுக்கு எண்களை அழிக்கலாம். பின்னர் அந்த தளத்திற்கு செல்ல நீங்கள் அந்த எண்னினை தட்டாசு செய்து ENTER பொத்தனை அழுத்தினால் போதும். உடனே உங்கள் உலாவி உங்களை அந்த இணைய தளத்திற்கு கொண்டு சென்றுவிடும்.





2.புக் மார்க்குகளுக்கான நீட்சி : 

இந்த நீட்சி உங்கள் உலாவியின் முகப்பு பக்கத்தை அழகாக மாற்றுகிறது இந்த நீட்சி உங்களின் புக் மார்க்குகளை அழகாக ஒரு பட்டியலிட்டு அதனை உங்கள் உலாவியின் நடுவில் வைக்கிறது.மேலும் இந்த நீட்சி நீங்கள் கடைசியாக பயன்படுத்திய பக்கங்களையும் மூடிய பக்கங்களை பட்டியலிடுகிறது. அதுமட்டுமல்ல நீங்கள் இதில் குறிப்புகளை எழுதி நேரடியாக ஜிமெயிலில் பதிவு செய்யலாம். இதற்கும் இந்த நீட்சி பயன்படுகிறது.







3. புது டேபின் பின்புல படத்தினை மாற்ற : 

இந்த நீட்சி மூலம் நாம் நம் டேபின் பின்னால் உள்ள படத்தை மிக எளிதாக மாற்றலாம். இதில் FLICKR - இல் உள்ள படத்தை உங்கள் டேபின் பின்னணியில் வைக்கலாம். இதனால் நீங்கள் ஒவ்வொரு முறை புதிய டேபினை திறக்கும் போதும் உங்களுக்கு பிடித்த படம்தான் வரும்.




குறிப்பு : அதன் பக்கத்திருக்கு செல்ல தலைப்பில் சொடுக்குங்கள் 




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !














3 comments:

  1. அருமை நண்பா

  2. mika arumai...................

  3. வருகைக்கு அன்றி சகா ! !

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets