skip to main | skip to sidebar

Sunday, October 9, 2011

படங்களில் இருந்து எழுத்துக்களை மட்டும் பிரித்து எடுக்க ! !

இப்பொழுது எல்லா வகையான செயல்களுக்கும் மென்பொருள்கள் வந்துவிட்டது உதாரணத்திற்கு நாம் ஒரு பக்கத்திற்கு ஒரு ஆவணத்தை தட்டாசு செய்ய வேண்டுமென்றால் அதை நாம் வாசித்தால் போதும் அதை கணினியே தட்டாசு செய்கிறது சில மென்பொருள்களின் உதவியோடு இதுமட்டுமல்ல இன்னும் பல கடினமான வேலைகளை மிக விரைவாகவும் எளிதாகவும் செய்யலாம். அந்த மாதிரியான மென்பொருள்தான் இது ஒரு படத்தில் உள்ள எழுத்துக்களை படத்தில் இருந்து மிக எளிதாக காப்பி செய்து விடலாம்.

இந்த மென்பொருள் மூலம் ஒரு படத்தில் பல எழுத்துகள் இருந்தால் அதில் குறிப்பிட்ட சில எழுத்துக்களை மட்டும் நாம் காப்பி செய்து அதனை ஒரு நோட்பேடிலோ அல்லது வோர்ட் ஆவணத்திலோ(DOCUMENTS) பேஸ்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இதனை பயன்படுத்துவதும் மிகவும் எளிது.

இந்த மென்பொருளை பதிவிறக்க : GT TEXT

இதனை பயன்படுத்த :


  • மேலே உள்ள தளத்திற்கு சென்று இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
  • பின்னர் இந்த மென்பொருளை திறந்து எந்த படத்தில் இருந்து எழுத்துகளை காப்பி செய்ய வேண்டுமோ அந்த படத்தை தேர்வு செய்யுங்கள்.
  • உங்கள் படம் திறக்க படும் அதில் உங்கள் சுட்டியை இடது கிளிக் செய்து இழுங்கள் உங்களுக்கு தேவையான வற்றை தேர்வு செய்யுங்கள்.
  • பின்னர் கையை எடுங்கள் ஒரு சின்ன விண்டோ வரும் அதில் நீங்கள் தேர்வு செய்த எழுத்துக்களுடன் பொத்தான்களும் இருக்கும்.
  • நீங்கள் தேர்வு செய்தது சரியாக வந்துவிட்டால் CONTINUE என்ற பொத்தனை அழுத்துங்கள் உங்கள் எழுத்துக்கள் காப்பி ஆகிவிடும் பின்னர் அதனை எங்கு தேவையோ அங்கு பேஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
  • நீங்கள் தவறாக தேர்வு செய்துவிட்டால் CANCEL பொத்தானை அழுத்துங்கள்.



அவ்வளவு தான் முடிந்துவிட்டது நமக்கு தேவையான எழுத்துக்களை மிக எளிதாக படங்களில் இருந்து காப்பி செய்துவிடலாம்.இந்த மென்பொருள் DTP வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !









0 comments:

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets