skip to main | skip to sidebar

Saturday, July 30, 2011

கூகுளில் சுலபமாக தேடுவதற்கு சில நுணுக்கங்கள்

இணையம் என்று வந்துவிட்டால் நமக்கு முதலில் ஞாபகம் வருவது கூகிள் தான். கூகிள் நிறுவனம் நிறைய சேவைகளை நமக்கு இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் இதன் தேடு இயந்திரத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த தேடியந்திரத்தின் மூலம் நாம் எந்த வகையான கோப்புகளையும் தகவல்களையும் தேடி கண்டுபிடித்து விடலாம். ஆனால் நாம் தேடுவதற்கு கொடுக்கும் சொற்கள் தான் மிக முக்கியம் அதை நாம் மிக கவனமாக கொடுக்க வேண்டும்.கூகுளில் சுலபமாக தேடுவதற்கு சில நுணுக்கங்கள் இருக்கிறது அதை பற்றி நாம் பார்ப்போம் .

1.SITE :

இந்த குறிச்சொல் மூலம் நாம் குறிப்பிட்ட தளத்தில் மட்டும் நமக்கு வேண்டிய தகவலை தேடலாம். இப்பொழுது நீங்கள் நமது வந்தேமாதரம் தளத்தில் முகபுத்தகம் சம்மதமான பதிவுகளை தேட கீழே உள்ளவாறு சொடுக்குங்கள்


facebook site:vandhemadharam.com

இதை பற்றி ஏற்கனவே நண்பர் சசிகுமார் அவரது வலைப்பூவில் பகிர்ந்துள்ளார் 

2.FILE TYPE :

இந்த குறிச்சொல் மூலம் நாம் குறிப்பிட்ட வடிவத்தில் உள்ள கோப்புகளை மட்டும் இணையத்தில் தேடலாம் . இப்பொழுது நீங்கள் ஹாக்கிங் பற்றிய PDF கோப்பினை தேடுவதற்கு கீழே உள்ளதை போல சொடுக்குங்கள்.

hacking:pdf

இந்த PDF -க்கு பதிலாக உங்களுக்கு வேண்டிய வடிவத்தை கொடுங்கள் . நீங்கள் வீடியோ வடிவத்தை கொடுத்து கூட தேடலாம் AVI, MPEG, FLV போன்றவற்றை  உள்ளீடு செய்து தேடுங்கள் .

3.INURL :

இந்த குறிச்சொல் மூலம் நாம் குறிப்பிட்ட URL-ஐ தேடலாம் . நீங்கள் கொடுக்கும் குறிச்சொல் இருக்கும் இல்லா URL-யும் கூகிள் பட்டியலிடும். நீங்கள் LOGIN பக்கத்தை தேட கீழே உள்ளதை போல சொடுக்கவும்.

inurl : Login

4.INTITLE : 

இந்த குறிச்சொல் மூலம் நாம் குறிப்பிட்ட தலைப்பில் உள்ள பக்கத்தை நாம் தேடலாம்.எந்த பக்கத்தின் தலைப்பில் உங்கள் சொல் இருந்தாலும் உடனே அதை பட்டியலிட்டு விடும் கூகிள் . நீங்கள் ஹாக்கிங் பற்றிய பக்கங்களை தேட 

intitle:Hacking

5.DEFINE : 

இந்த குறிச்சொல் மூலம் நாம் சொற்களின் பொருளை தேடலாம் . இந்த குறிச்சொல் அகராதி போல செயல்படுகிறது.

define:Hacker

முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் இந்த குறிச்சொல்களை சேர்த்தும் தேடலாம்.

intitle:Hacking :pdf


இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள் 













1 comments:

  1. தேவையான விஷயங்கள்....பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets