skip to main | skip to sidebar

Tuesday, October 4, 2011

ஃபயர்ஃபாக்ஸில் குறிப்பிட்ட டேபினை மட்டும் மறைக்க ! ! ( TO HIDE TABS)

ஃபயர்ஃபாக்ஸ் உலாவியை பற்றி நான் சொல்லி தெரிவதில்லை அந்த அளவுக்கு அது பிரபலமான ஒரு உலாவி இந்த உலாவியில் பல வகையான வசதிகள் இருக்கின்றன. பல வகையான உலாவிகள் வந்தாலும் இதன் பயனாளர்கள் குறைவதேயில்லை. அது மட்டுமல்ல இந்த உலாவியில் நாம் பல வகையான நீட்சிகளை நாம் நிறுவிக்கொள்ளலாம் இதன் மூலம் பல வேலைகளை நாம் மிக எளிதாக செய்து விடலாம்.

நாம் பார்கபோகும் நீட்சி சற்று வித்தியாசமானது இதன் மூலம் நாம் சில ரகசிய வேலைகள் செய்யலாம். இந்த நீட்சியானது நாம் உலவிக்கொண்டு இருக்கும் டேபினை மறைக்கிறது. யாராவது நாம் உலாவுவதை பார்க்க கூடாது என்று எண்ணினால் நீங்கள் இந்த நீட்சியை பயபடுத்தலாம்.

நீங்கள் ஒரு டேபினை மறைத்து விட்டால் அது நம் உலாவியின் ADD ON  டூல்பாரில் மறைந்து இருக்கும். இதனால் நீங்கள் வேலை செய்யும்போது யாரவது குறுகிட்டால் அல்லது அழைத்தால் நீங்கள் அதனை மறைத்து வைத்துவிட்டு செல்லலாம் மற்றவர்கள் பார்த்தால் நீங்கள் மறைக்காத பக்கங்கள் மட்டுமே தெரியும். உங்களுக்கு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது அதனை திறந்து பார்க்கலாம்.

இதனை தரவிறக்க : HIDE TAB





இதனை பயன்படுத்த : 



  • மேலே உள்ள சுட்டியை சொடுக்கி இதனை நிறுவிக் கொள்ளுங்கள்
  • பின்னர் நீங்கள் பக்கத்தை மறைக்க CTRL + Q என்று அழுத்தினால் உங்கள் பக்கம் மறைந்துவிடும்.
  • மறைத்த பக்கத்தை மறுபடியும் திறக்க உங்கள் உலாவியின் கீழே வலது புறத்தில் சிகப்பு நிறத்தில் உள்ள இடத்தை அழுத்துங்கள் நீங்கள் மறைத்து வைத்த எல்லாப் பக்கங்களும் வரும்.
  • அதனை அழுத்தி நீங்கள் மறைத்த பக்கங்களை மறுபடியும் பார்க்கலாம்.


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !














3 comments:

  1. பயனுள்ள பகிர்வு. நன்றிங்கோ

  2. வருகைக்கு நன்றி சகா ! ! !

  3. நல்ல தகவல்... நன்றி நண்பரே!!

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets