skip to main | skip to sidebar

Friday, October 28, 2011

விண்டோவ்ஸ் ் 7 இல் மறைந்துள்ள பிரச்சனைகள் பதிப்பான் ( PROBLEM RECORDER )

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணினிகளில் அதிகமாக பயன்படுத்த கூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவனமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண்டோஸ் 8-இன் சோதனை பதிப்பை இப்பொழுது தான் வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரிய வரவேற்ப்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது.இந்த விண்டோஸ் 7 பதிப்பில் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. அதில் உள்ள ஒரு சிறப்பான வசதியை பற்றி பார்ப்போம்.

விண்டோஸ்7 இல் ப்ராப்ளம் ரெகார்டர் என்ற ஒரு வசதி இருக்கிறது இதன் மூலம் நாம் நம் கணினியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கம்ப்யூட்டர் சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களுக்கோ அனுப்பி அந்த மென்பொருளில் உள்ள பிரச்சனைகளை பற்றி அறிந்துகொள்ளலாம்.

இந்த மென்பொருள் ஒவ்வொரு திரையையும்  பதித்து ( SCREEN SHOT ) வைக்கிறது அதுமட்டுமல்ல நமது சுட்டியின் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு கிளிக்யையும் பதிந்து வைக்கிறது. இதன்  மூலம் நீங்கள் எங்கே என்ன செய்திர்கள் என்பதை மிக எளிதாக அறிந்துகொள்ளலாம். இதனை இயக்குவதும் மிகவும் சுலபமானது.

இதனை திறப்பதற்கு :

  • START மெனுவில் கிளிக் செய்து அதில் RUN-ஐ அழுத்துங்கள் அதில் PSR என தட்டாசு செய்யுங்கள் ( அல்லது )

  • START மெனுவில் உள்ள SEARCH என்பதில் PSR என தட்டாசு செய்யுங்கள்.




இதனை  பயன்படுத்த :
    • முதலில்அந்த மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.

    • பின்னர்  வரும் விண்டோவில் START RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள்.

    • பின்னர் எந்த மென்பொருள் செயல்படவில்லையோ அதனை திறந்து நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்.

    • நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சுட்டியினை அழுத்தும்போதும் இந்த மென்பொருள் ஸ்க்ரீன் SNAP SHOT எடுத்து வைக்கும்.

    • முடிந்த உடன் STOP RECORD என்ற பொத்தனை அழுத்துங்கள்.

    • பின்னர் அது கோப்பை ( FILE ) எங்கு சேமிக்க வேண்டுமென்று கேட்கும்  அதனை தேர்வு செய்து SAVE பொத்தனை அழுத்துங்கள்.



    • அவ்வளவு தான் நீங்கள் இந்த கோப்பை யாருக்கு வேண்டுமோ அனுப்பிகொள்ளுங்கள்.

    இந்த மென்பொருள் உங்கள் ஸ்க்ரீன்கலை பதிந்து MHTML கோப்பாக மாற்றிவைக்கும் அதில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் படிப்படியாக சேமிக்கப் பட்டிருக்கும்.





    இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !









    7 comments:

    1. தெளிவா சொன்னீங்க நவ்ஸாத்


      நன்றி

    2. பகிர்வுக்கு நன்றிங்கோ....

    3. வருகைக்கு நன்றி சகா ! !

    4. தகவலுக்கு நன்றி சகோ...தமிழ்மணம் ஓட்டு -1 ஆமா நீங்களும் உங்கள் பதிவுக்கு ஓட்டு போடலாம் போடலையா.

    5. தமிழ்மனம் இப்போ தான் இங்க ஓபன் ஆச்சு சகா ! !

    6. நன்றி

    7. எனது பிளக்கை பார்க்க முடியவில்லை
      Blog has been removed
      Sorry, the blog at ganeshdigitalvideos.blogspot.com has been removed. This address is not available for new blogs.

      Did you expect to see your blog here? See: 'I can't find my blog on the web, where is it?'

      என்று வருகிறது எப்படி எனது பிளக்கை மீட்பது?

      my email ; ganeshtnebgobi@gmail.com

    Post a Comment

    நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

    Related Posts Plugin for WordPress, Blogger...
     

    NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

    Blogger Widgets