skip to main | skip to sidebar

Monday, August 29, 2011

உங்கள் டெஸ்க்டாப்பில் பிரபல சமூகவளைதளம் பேஸ்புக்

சமூகவலைத்தளத்தில் மிகவும் முக்கியமான மற்றும் முதன்மையான தளம் பேஸ்புக். இந்த தளத்தில் பல வசதிகள் இருக்கிறது. இதை போன்று பல வசதிகளை மற்ற தளங்கள் கொண்டு வந்தாலும் இதன் பயனாளர்களின் எண்ணிக்கை குறைவதே இல்லை. சமீபத்தில் கூகிள் தளம் வெளயிட்ட PAGE RANK இல் 1 ட்ரில்லியன் PAGE VIEWS பேஸ்புக் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடதக்கது.  இதை பற்றி படிக்க. இந்த சாதனையை இது வரை யாரும் நிகழ்த்த வில்லை என்பது குறிப்பிடதக்கது.

அப்படிபட்ட பேஸ்புக் தளத்திற்கு நாம் அடிக்கடி செல்லுவோம் அந்த மாதிரியான நேரங்களில் நாம் நம் உலவாவியை திறந்து அதன் முகவரியை தட்டாசு செய்து நம் கணக்கில் நுழையவேண்டும் அதற்க்கு பதில் நம் டெக்ஸ்டாப்பிலேயே பேஸ்புக் தளத்தை கொண்டுவந்து விட்டால் எப்படி இருக்கும்?

ஆம் இதற்க்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது அதை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்கள் டெஸ்க்டாப்பில் வலது புறத்தில் உள்ள ஒரு சின்ன ஐகானை அழுத்தி உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உங்கள் கணக்கின் உள்ளே நுழைந்துகொள்ளுங்கள் அதன் பின் ALLOW என்ற பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவு தான் இனி உங்கள் நண்பர்கள் ஏதாவது POST செய்தாலோ அல்லது போட்டோவை போஸ்ட் செய்தாலோ உங்கள் டெஸ்க்டாப்பில் NOTIFICATION வரும்.




அதில் நீங்கள் அதற்க்கு கருத்துரையிடலாம் மற்றும் அதற்க்கு LIKE கொடுக்கலாம்.மேலும் இதில் நாம் மிக எளிதாக படங்களை தரவேற்றலாம் (UPLOAD) இதற்க்கு நமக்கு தேவையான படங்களை இழுத்து உள்ளே போட்டு கொள்ளுங்கள் பின்னர் ALBUM என்பதில் உங்களுக்கு தேவையான அல்பத்தை தேர்வு செய்து UPLOAD என்ற பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் பக்கத்தில் வந்துவிடும்.

இந்த மென்பொருளின் சிறப்பு அம்சங்கள் :

  • இந்த மென்பொருள் மூலம் நாம் டெஸ்க்டாப்பில் இருந்தவாரே நம் STATUS-ஐ அப்டேட் செய்யலாம் 
  • இதன் மூலம் நாம் மிக எளிதாக படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
  • இதன் மூலம் நாம் படங்களை BULK- UPLOAD செய்யலாம்.
  • இது அளவில் மிகவும் சிறியது இதை மிகவும் எளிதாக பயன்படுத்தலாம்.
  • இதன் மூலம் நாம் அபப்ளிக்கேசனையும் அணுகலாம் 







இதை தரவிறக்க : WWW.FLIPTOAST.COM



இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !









2 comments:

  1. பாஸ் ad-maya எப்படி போடுறது ............

  2. Sorry for the late reply Boss...!
    Give me your id....

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets