skip to main | skip to sidebar

Sunday, August 7, 2011

நீங்களே ரன் கட்டளையை உருவாக்குங்கள் ! !

ரன் கட்டளை விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு முக்கியமான மற்றும் சிறப்புமிக்க ஒரு வசதி. இதன் மூலம் நாம் ஒரு மென்பொருளை அதன் ஐகோனை பயன்படுத்தாமல் இயக்கலாம் . அது மட்டுமல்ல இதன் மூலம் நாம் விண்டோஸின் கருவிகளையும் திறக்கலாம். இது அனைவரும் அறிந்தது தான் ஆனால் இதன் மூலம் நாம் இல்லா மென்பொருளையும் திறக்க இயலாது இதில் முன்னிருப்பாக விண்டோஸில் உள்ள மென்பொருளை மட்டும் தான் அணுக முடியும் . நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள்களை இதன் மூலம் அணுக இயலாது . அவ்வாறு அணுகுவதற்கு நாம் புதிதாக ரன் கட்டளைகளை உருவாக்க வேண்டும் .

புதிதாக ரன் கட்டளைகளை உருவாக்க :

1. முதலில் ரெஜிஸ்டரி எடிட்டரை திறக்கவும் அதற்க்கு START --> RUN அல்லது   WIN+R-ஐ சொடுக்கி REGEDIT என்று தட்டாசு செய்யுங்கள் .

2. பின்னர் பின்வரும் இடத்திற்கு செல்லவும் :

HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Apps Path


3. பின்னர் APPS PATH -இல் வலது கிளிக் செய்து NEW-->KEY என்பதை சொடுக்கி புதிய விசையை உருவாக்கி கொள்ளுங்கள். 







4. பின்னர் எந்த மென்பொருளுக்கு நீங்கள் கட்டளை உருவாக்க வேண்டுமோ அதன் பெயரை அதில் கொடுங்கள். உதாரனத்திற்கு VLC-க்கு உருவாக்க Vlc.exe என்று கொடுங்கள் .


5. அதற்க்கு பிறகு DEFAULT என்பதில் வலது கிளிக் செய்து MODIFY என்பதை சொடுக்குங்கள் அதில் VALUE DATA என்ற சொற்பெட்டியில் அந்த மென்பொருள் எங்கே நிருவப்பட்டுள்ளதோ அந்த இடத்தை கொடுக்கவும்.


C:\Program Files\VideoLAN\VLC\vlc.exe






6. பிறகு மறுபடியும் வலது கிளிக் செய்து NEW-->STRING VALUE என்பதை தேர்வு செய்யுங்கள் அதில் path என்று பெயரிடுங்கள் அதிலும் மேலே உள்ளதை போல வலது கிளிக் செய்து MODIFY என்பதில் VALUE DATA-வில் அதே முகவரியை கொடுத்து OK அழுத்துங்கள்.








அவ்வளவு தான் இனி நீங்கள் ரன் பெட்டியில் VLC என தட்டாசு செய்தால் VLC மீடியா பிளேயர் திறக்கும். இதைப்போல் நீங்கள் விரும்பிய மென்பொருளுக்கு கட்டளையை உருவாக்கி கொள்ளலாம் .





இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் அனைவரும் பயனடைவார்கள் ! !















2 comments:

  1. வணக்கம் தோழா அற்புதமான படைப்பு

  2. நன்றி சகா ! !

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets