சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். இந்த தளத்தில் பல வகையான வசதிகள் உள்ளன. இந்த தளத்தில் பலரும் தனது கருத்துகளை தனது புகைபடங்கள் மூலமாகவும் தன் வீடியோக்கள் மூலமாகவும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். இந்த தளத்தில் நம்மை கவர்ந்த வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுவதற்கு வசதி உள்ளது ஆனால் அதனை பதிவிறக்கம் செய்வதற்கான வழிகளை தேட வேண்டியுள்ளது .
இதனை நிறுவுவதற்கு :
நம்மை கவர்ந்த பேஸ்புக் வீடியோக்களை பதிவிறக்க ஒரு பயர்பாக்ஸ் நீட்சி உதவுகிறது. இந்த நீட்சியை பயன்படுத்தி நாம் பேஸ்புக் வீடியோக்களை மிக எளிதாக பதிவிறக்கலாம். அது மட்டுமல்ல இதனை பயன்படுத்தி நாம் வீடியோவின் வடிவத்தையும் மாற்றலாம். நேரடியாக வீடியோவை நாம் வடிவத்தை மாற்றியே பதிவிறக்கலாம் . இதனை பயன்படுத்துவதும் மிக எளிது.
இதனை பதிவிறக்க : VIDEO DOWNLOAD HELPER
இதனை நிறுவுவதற்கு :
- இதனை பதிவிறக்கி உங்கள் உலாவியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
- பின்னர் உங்கள் உலாவியை ஒருமுறை மறுத்தொடக்கம் செய்து கொள்ளுங்கள்.
- பின்னர் உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு செல்லுங்கள் வீடியோவை பாருங்கள் உங்கள் உலாவியின் மேலே ஒரு பொத்தான் இருக்கும் அதனை அழுத்துங்கள்.
- அதில் பல வசதிகள் வரும் உங்களுக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்யுங்கள்.
- பதிவிறக்க DOWNLOAD என்ற பொத்தனை அழுத்துங்கள்.
- வீடியோ கோப்பின் வடிவத்தை மாற்ற DOWNLOAD & CONVERT என்ற பொத்தானை அழுத்துங்கள்.
- பின்னர் ஒரு விண்டோ வரும் அதில் உங்களுக்கு விருப்பமான வடிவத்தை ( FORMAT ) தேர்வு செய்யுங்கள்.
- பின்னர் எங்கு பதிவிறக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.
- அவ்வளவு தான் உங்கள் வீடியோ பதிவிறக்க படும்.
|
1 comments:
tamil words purivadhilai; english varthaigalai use panna mudiuma pl.
Post a Comment
நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....