skip to main | skip to sidebar

Tuesday, November 22, 2011

ஆன்லைனில் ஸ்க்ரீன் ரெகார்டிங் செய்ய சிறந்த தளம் ! !

ஸ்க்ரீன்ஷாட்கள் மற்றும் ஸ்க்ரீன்கள் ரெகார்டிங் செய்வதற்கு பல மென்பொருள்கள் இலவசமாகவும் காசுக்கும் கிடைக்கிறது. இலவசமாக பல மென்பொருள்கள் கிடைத்தாலும் அதில் பல வசதிகள் இருக்காது. இந்த மாதிரியான மென்பொருளை பயன்படுத்தி பயன்படுத்தி கணினியின் நிலைவட்டில் (HARD DISK) நினைவகம் குறைந்தது விட்டது.


நீங்கள் இந்த மாதிரி எந்த வகையான தொந்திரவும் இல்லாமல் உங்கள் கணினியில் எந்த பதிவிறக்கமும் செய்யாமல் நல்ல ஸ்க்ரீன்ஷாட்களை உருவாக்க விரும்பினால் இதோ அதற்க்கான ஒரு தளம். இந்த தளம் மூலம் நாம் நம் ஸ்க்ரீனை மிகவும் எளிதாக ரெகார்ட் செய்யலாம்.

தளத்திற்கு செல்ல :  Screencast-O-Matic



இந்த தளம் மூலம் நாம் நம் ஸ்க்ரீனை மிக எளிதாக ரெகார்ட் செய்யலாம் இதன் மூலம் நாம் ஸ்க்ரீனை பதிந்துக் கொள்ளலாம் அது மட்டுமல்ல அதனை பகிர்ந்து கொள்ளலாம். இது நம் உலாவியின் மூலம் செயல்படுகிறது அதனால் நாம் எந்த வகையான இயங்குதளம் பயன்படுத்தினாலும் இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஸ்க்ரீன்களை ரெகார்ட் செய்ய : 

  • மேலே உள்ள சுட்டியை அழுத்தி அந்த பக்கத்திற்கு சென்று கொள்ளுங்கள் பின்னர் Start Recording என்ற பொத்தானை அழுத்துங்கள்.

  • பின்னர் ஒரு விண்டோ திறக்கும் அதில் ரெகார்ட் ஸ்க்ரீன் வரும் அதில் உங்கள் தேவைக்கு ஏற்ப அதில் உள்ள அமைப்புகளை மாற்றிவிட்டு சிவப்பு பொத்தானை அழுத்துங்கள் உங்கள் திரை ரெகார்ட் செய்யப்படும்.

  • பதிவு செய்வதை நிறுத்த DONE பொத்தனை அழுத்துங்கள் .

  • அவ்வளவு தான் உங்கள் திரை பதிவாகிவிடும். ஆனால் இதன் மூலம் நீங்கள் பதினைந்து நிமிடம் மட்டுமே பதிவு செய்ய முடியும்.



  • மேலும் இதன் மூலம் நீங்கள் பதிவு செய்யும் வீடியோக்களை யூடியூபில் நேரடியாக பதிவேற்றம் செய்யலாம்.

நீங்கள் இதன் மூலம் PICTURE-IN-PICTURE(PIP) படங்களை உருவாக்கலாம். இதன் மூலம் நாம் நம் வெப்காமேராவையும் இயக்க முடியும்.


இனி நீங்கள் மிக எளிதாக வீடியோக்களை ரெகார்ட் செய்யலாம் அதுவும் இலவசமாக...





இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்கள் மற்றவர்களும் பயனடைவார்கள்! !









2 comments:

  1. அருமையான் தகவல் பகிர்வுக்கு நன்றி பாஸ்

  2. வருகைக்கு நன்றி சகா ! !

Post a Comment

நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets