தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் அகலக்கற்றை இணைய இணைப்பை அடிப்படை உரிமையாக அறிவித்திருக்கிறது அந்த நாடு ! ! ! !
பின்லாந்தின் ஒவ்வொரு குடிமகனும் 1 MBPS வேகத்திலான இணைய இணைப்பை பெறுவது உறுதி செய்யப் பட்டிருக்கிறது . 2015 ஆம் ஆண்டிற்கெல்லாம் இதை 100 MBPS ஆக உயர்த்தவும் வழி செய்யப்படுகிறது .
ஒவ்வொரு குடியிருப்புக்கும் அரசே இலவசமாக இந்த இணைப்பை ஏற்படுத்தித் தரும் .
தற்போதைய நிலவரப்படி பின்லாந்தில் உள்ள வயது வந்தோரில் 96 விழுக்காட்டினர் இணைய இணைப்பை வைத்துக் கொண்டிருகிறார்கள் .
பின்லாந்து இப்படியொரு இலவசத்தை அளிக்க முன்வந்திருக்கும் நேரத்தில் இங்கிலாந்து , பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் இணையப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது .
இலவசமாகத் தரவிறக்கம் செய்வது அனுமதியின்றி கோப்புகளைப் பகிர்த்து கொள்வது போன்ற கட்டுபடுகளைக் கொண்டு வருவது அவசியம் என்று கருதுகின்றன இங்கிலாந்தும் பிரான்சும் .
முறையற்ற பயன்பாடுகளைப் பயனார்களே கண்காணித்துக் கொள்வார்கள் என்கிறது பின்லாந்து .
|
3 comments:
:)
தகவலுக்கு நன்றி...வாழ்த்துக்கள்
நம்ம நாடு எப்ப இப்படி யோசிக்கப்போகுதோ.. ?கடவுளே...!
Post a Comment
நீங்க ரொம்ப நல்லவங்க கமெண்ட் இல்லாம் போடுறிங்க....