skip to main | skip to sidebar

Thursday, May 26, 2011

ஆப்பபேரடிங் சிஸ்டத்தை நிறுவிய பின்னரும் பார்ட்டிசன் செய்ய ஓண்டர்ஷேர் ! ! ! ! !

0 comments
 கணினியில் தகவல்களை சேமிக்கவும் மற்றும் மென்பொருள்களை நிறுவி இயக்கவும் நாம் வண்தட்டினை பயன்படுத்துகிறோம் . இந்த வண்தட்டானது ஆப்பபேரடிங் சிஸ்டம் நிறுவப்படும் வரை ஒரே பகுதியாக தான் இருக்கும் . ஆப்பபேரடிங் சிஸ்டத்தை நிறுவும்போது நாம் இதை பிரிப்போம் .

       ஒரு சில நேரங்களில் வண்தட்டினை தனியொரு பகுதியாக பிரிக்காமல் ஒரே பகுதியாக விட்டுவிடுவோம் . இதனால் நமக்கு பல சிக்கல்கள் வரலாம்.நாம் இல்லா தகவல்களையும் ஒரே பகுதியில் தான் சேமிக்க வேண்டியிருக்கும் .

       கணினியில் மற்றொரு ஆப்பபேரடிங் சிஸ்டத்தை நிறுவும் போதும் நமக்கு இடையூறு விளைவிக்கும் .




       இதனால் நாம் மறுபடியும் ஆப்பபேரடிங் சிஸ்டத்தை நிறுவவேண்டும் அவ்வாறு நிறுவும் போது வண்தட்டினை பிரிக்க வேண்டும் .

      ஆனால் ஆபெரடிங் சிஸ்டத்தை மறுபடியும் நிறுவாமல் வன்தட்டினை ஆப்பபேரடிங் சிஸ்டத்தின் உதவியுடன் பிரிக்க முடியும். 

       டிஸ்க்மேனேஜ்மென்ட் ( DISK MANAGEMENT ) என்னும் வசதியை பயன்படுத்தி ஆப்பபேரடிங் சிஸ்டம் நிறுவிய பின்னரும் வன்தட்டினை பிரிக்கமுடியும் .


         ஆனால் ஒரு சில வசதிகளை முழுமையாக பெற முடியாது . ஆனால் ஓண்டர்ஷேர் டிஸ்க் மேனேஜர் (WONDERSHARE DISK MANAGER) என்னும் மென்பொருள் மூலமாக அனைத்து வசதிகளையும் பெற முடியும். தற்போது இந்த மென்பொருள் இலவசமாக கிடைகிறது

       லைசென்ஸ் கீ பெற இந்த தளத்திற்கு செல்லவும் .  KEY

           அங்கு சென்று பதிவு செய்யவும் செய்த பின்னர் உங்கள் மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு கீ அனுப்பப்படும். ஒரு நாளைக்கு 300 கீயினை இந்த நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.


இந்த மென்பொருளை பதிவிறக்க :    
WONDERSHARE DISK MANAGER
      இந்த மென்பொருளின் உதவியுடன் வன்தட்டினை பார்மாட், காப்பி , டெலிட் செய்ய முடியும் .மேலும் ஒரு பகுதியினை உடைத்து பல்வேறு பகுதியாகவும் உருவாக்க முடியும். பார்ட்டிசனை மீட்டெடுக்கவும் , மறைத்து வைக்கவும் இந்த மென்பொருள் உதவுகிறது .









! ! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! !





இது முதலிலேயே தெரிந்சுருந்தா என் சிஸ்டத்தை பார்மட் அடிச்சுயிருக்க மாட்டனே ! ! !

Tuesday, May 24, 2011

ஸ்பீடு ஃபேன் ! ! ! !

0 comments
             உங்களுடைய கணினி அடிக்கடி மருத்தொடக்கம் (RESTART) ஆகின்றதா ? உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா ?

        இதற்கான காரணம் ஒரு வேலை நம்முடைய கணினியின் வெப்பம் அதிகரிப்பதால் இருக்கலாம் . 





                  அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் . உங்கள் கணினியின் அனைத்து பாகங்களின் வெப்ப அளவினையும் அறிந்து கொள்வதுடன் குளிர்விக்கும் மின்விசிறி ஓடும் வேகத்தையும் மாற்ற உதவுகிறது.

         மற்றவற்றை போன்று அல்லாமல் இது உங்கள் கணினியின் வண்வட்டையும் (HARD DISK) தொடர்பு கொண்டு அவற்றின் வெப்ப அளவினை நமக்கு காட்டுகின்றது .

          இந்த மென்பொருள் தாய்ப்பலகையில் (MOTHER BOARD) இருக்கும் டிஜிட்டல் டெம்பரேச்சர் சென்சொர் எனப்படும் வெப்ப உணரிகளின் மூலம் வெப்ப அளவினை கணக்கிட்டு அதற்கேற்ப மின்விசிறியின் வேகத்தை மாற்றியமைக்கிறது.

அதனால் கணினியுடன் சி.பி.யு கேபினெட்டில் (CPU CABINET ) இருந்து வரும் சத்தம் குறைகிறது .

 


         இது ப்ராசரில் உள்ள ஒவ்வொரு உள்ளகத்தின் பயன்பாட்டையும் ,வெப்ப அளவையும் காட்டுகிறது . 

        இது விண்டோஸ் 9X முதல் விண்டோஸ் 7 வரை உள்ள இல்லா  இயங்குதளங்களிலும் இயங்குகிறது . இவை 64 பிட் இயங்குதலத்திலும் சிக்கலின்றி இயங்குகிறது .

! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! !




Saturday, May 21, 2011

கோப்புகள் தயாரித்த தேதியை மாற்ற ! ! ! ! !

0 comments
கணினியில் பணிபுரிகையில் ஒரு புதிய கோப்பை உருவாகினால் அந்த கோப்பினை வலது கிளிக் செய்து அதன் உடமைகளை பார்த்தால் கோப்பினை உருவாக்கிய நாள் , நேரம் ஆகியவை தெரியவரும் .






  முன்தேதியிட்டு கோப்பினை உருவாக்கியவாறு நாம் தேதியை சில நேரங்களில் மாற்றவேண்டியது வரலாம் .அந்த மாதிரி நேரத்தில் கைக்கொடுகிறது இந்த மென்பொருள் இதன் பெயர் FILE DATE CHANGER . இது மிகவும் சிறிய கொள்ளளவு கொண்டது

இதை பதிவிறக்க கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்

FILE DATE CHANGER





ஏற்கெனவே உருவாக்கி உள்ள கோப்பின் உடமைகளை(PROPERTIES) பாருங்கள். இப்போது இந்த மென்பொருள் மூலம் அந்த கோப்பினை தேர்வு செய்யுங்கள் . இதிலுள்ள SIMPLE CHANGE FILE DATE என்பதை கிளிக் செய்து தேவையான தேதியை கொண்டு வந்து,ஓகே கொடுத்தவுடன் ஒரு விண்டோ ஒன்று வரும் அதற்கும் ஓகே கொடுங்கள். 
இப்போது கோப்பின் உடமையை சென்று பாருங்கள் கோப்பின் தேதி மாறி இருக்கும்.

! ! ! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! ! !





இனிமே இஷ்டம் படி தேதிய மாத்துங்க
Nowsath



Friday, May 20, 2011

இது அல்லவா நாடு ! ! ! ! !

3 comments
உ லக இணைய வரலாற்றில் ஒரு மைல்கல் 01.07.2010 பின்லாந்து நாடு உலகிலேயே முதல் முறையாக வேறு எந்த நாடும் செய்திராத புதுமை ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் அகலக்கற்றை இணைய இணைப்பை அடிப்படை உரிமையாக அறிவித்திருக்கிறது அந்த நாடு ! ! ! !

பின்லாந்தின் ஒவ்வொரு குடிமகனும் 1 MBPS வேகத்திலான இணைய இணைப்பை பெறுவது உறுதி செய்யப் பட்டிருக்கிறது . 2015 ஆம் ஆண்டிற்கெல்லாம் இதை 100 MBPS ஆக உயர்த்தவும் வழி செய்யப்படுகிறது .
ஒவ்வொரு குடியிருப்புக்கும் அரசே இலவசமாக இந்த இணைப்பை ஏற்படுத்தித் தரும் .

தற்போதைய நிலவரப்படி பின்லாந்தில் உள்ள வயது வந்தோரில் 96 விழுக்காட்டினர் இணைய இணைப்பை வைத்துக் கொண்டிருகிறார்கள் .

பின்லாந்து இப்படியொரு இலவசத்தை அளிக்க முன்வந்திருக்கும் நேரத்தில் இங்கிலாந்து , பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் இணையப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது .

இலவசமாகத் தரவிறக்கம் செய்வது அனுமதியின்றி கோப்புகளைப் பகிர்த்து கொள்வது போன்ற கட்டுபடுகளைக் கொண்டு வருவது அவசியம் என்று கருதுகின்றன இங்கிலாந்தும் பிரான்சும் .

முறையற்ற பயன்பாடுகளைப் பயனார்களே கண்காணித்துக் கொள்வார்கள் என்கிறது பின்லாந்து .





! ! ! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! ! !





நம்ம நாடு எப்போ இப்படி ஆகப்போகுதோ
நவ்ஸாத்šljam




Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets