skip to main | skip to sidebar

Tuesday, June 28, 2011

FACEBOOK பக்கத்தை நீங்களே வடிவமைக்க ! !

2 comments
நாம் இணையத்தில் வந்துடன் தட்டாசு செய்யும் முதல் தளமாக FACEBOOK மாறிக்கொண்டு இருக்கிறது. FACEBOOK என்பது இப்பொழுது ஒரு மிக பெரிய சமுக தளமாக மாறிவிட்டது இப்பொழுது இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது .

இப்போதைக்கு இதனை 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்ட பயனர்கள் உபயோக படுத்துகின்றனர்.

சரி விசயத்திற்கு வருவோம் நாம் அனைவரும் முகப்புதகத்தை பயன்படுத்துகிறோம் அதை பற்றி நன்கு அறிந்துள்ளோம் . அதன் தோற்றம் ஒரே மாதிரி தான் இருக்கிறது இப்பொழுது தான் அதற்க்கு அந்த நிறுவனம் ப்ரொபைல் தீம்ஸை அறிமுகபடுத்தி இருக்கிறது.

அதன் மூலம்    FACEBOOK-இன் தோற்றத்தை மாற்றி அமைக்கலாம் .ஆனால் அது மிகவும் குறைவாக உள்ளது மேலும் அவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்குமா என்று தெரியாது.

அதனால் நீங்கள் விரும்பும் வண்ணம் நீங்களே உங்களுக்குரிய தீம்களை வடிவமைப்பதாக இருந்தால் எப்படி இருக்கும் ?


ஆமாம் இதோ அதற்க்கான சுட்டி

மேலே உள்ள தளத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களுக்கான தீம்ஸை வடிவமைக்கலாம்.மேலும் அதில் உள்ள தீம்சையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் அதை முதலில் நீங்கள் அதற்குரிய மென்பொருளை அந்த தளத்தில் இருந்து  பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் FACEBOOK கணக்கில் நுழைந்து மாற்றத்தை பாருங்கள்.


 இப்படி இருக்கும் உங்கள் பக்கம்






 இப்படி ஆகிவிடும் :







மேலும் இதில் நீங்கள் இன்னும் சில மாற்றங்களை செய்யலாம் உங்கள் கணக்கில் வலது பக்கத்தில் SETTINGS என்ற பொத்தானை அழுத்தவும் அதில் SNOW FLAKES மற்றும் FALLING HEARTS போன்ற வற்றை பயன்படுத்தலாம் தேவை இல்லை என்றல் அதை DISABLE செய்து கொள்ளுங்கள் .


மேலும்  நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை தேர்வு செய்து நீங்கள் கேட்கலாம் மற்றும் இதில் THUMBNAIL VIEW போன்ற வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது .




இதை பதிவிறக்கி உங்கள் பக்கத்தையும் அழகாக மாற்றுங்கள் .





!  !  ! மறக்காமல் வாக்களியுங்கள்  ! ! !



Sunday, June 26, 2011

இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் குறும்செய்தி அனுப்புங்கள் ! ! !

1 comments
நாம் எங்கு பார்த்தாலும் கைபேசி இருக்கும் காலம் இது . ரிலையன்ஸ் அம்பானியில் இருந்து சின்ன குழந்தைகள் வரை கைபேசியில் தான் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.கைபேசி என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது குறுஞ்செய்தி தான் ஆம் நாம் அனைவரும் அதில் அதிகமான நேரம் செலவு செய்கிறோம்.

குறுஞ்செய்தி என்பது என்பது நம்மை எந்த அளவு ஈர்த்து விட்டது என்றால் கைபேசியில் மெயின் அகௌன்ட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ குறுஞ்செய்திக்கு மட்டும் பணம் இருக்கிறது அந்த அளவுக்கு நாம் அதை நேசிக்கிறோம் .

சரி விசயத்துக்கு வருவோம் நாம் அனைவரும் குறுஞ்செய்தி அனுபிக்கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் அனைவரும் ஆங்கிலத்தில் தான் பொதுவாக அனுப்புகின்றோம்.

சில கைபேசி நிறுவனங்கள் நாம் குறிப்பிட்ட சில மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு அனுமதிக்கின்றன.ஆனால் நாம் விரும்பிய மொழிகளில் நாம் அனுப்ப முடியாது.

இதோ ஒரு மென்பொருள் உங்கள் கைபேசிக்கு நீங்கள் விரும்பிய இந்திய மொழிகளில் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பலாம்.

இதை பதிவிறக்க : பாணினி கீபேட்


மேலே உள்ள தளத்தில் உங்கள் கைபேசிக்கு ஏற்றவாறு உங்கள் மொழியை தேர்வு செய்து அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யது கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளை படுத்துவது மிக எளிதான ஒன்று இதில் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டாசு செய்ய தேவை இல்லை நீங்கள் சாதரணமாக உங்கள் மொழியிலே தட்டசு செய்யலாம்.

இந்த மென்பொருள் செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்க பட்டுள்ளது அதனால் நாம் அதிகமாக உபயோகிக்கும் எழுத்துக்களை அது முதலில் வைத்திருக்கும் .இந்த மென்பொருள் ஜாவா மொழியில் தான் எழுதப்பட்டுள்ளது.

உங்கள் கைபேசிக்கு இந்த மென்பொருள் வேலை செய்யுமா ? 


.



Saturday, June 25, 2011

பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்களை எளிதாக உருவாக்க ! ! !

0 comments
ன்றாட வாழ்க்கையில் பல நேரங்களில் பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்கள் தேவைப் படுகின்றன. வேலைக்கு விண்ணப்பம் செய்தல் , கல்லூரி அடையாள அட்டை போன்ற பல நிலைகளில் பாஸ்போர்ட் அளவு ஒளிப்படங்கள் அவசியமான ஒன்றாகும்.

நம்மிடம் டிஜிட்டல் கேமராவில் எடுத்த ஒளிப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் நல்ல ஒளிப்படங்கள் இருக்கும் அதை எப்படி பாஸ்போர்ட் அளவுக்கு மாற்றுவது எனத் தெரியாது .

        போட்டோஷாப் தெரிந்தவர்கள் இருக்கிற ஒளிப்படத்தை வைத்தே பாஸ்போர்ட் உருவாக்குவார்கள் . அது தெரியாதவர்கள் ஸ்டுடியோவிற்க்கோ அல்லது வேறு ஒருவரிடமோ அந்த போட்டோவை கொடுத்து அதை பாஸ்போர்ட் அளவுக்கு மாற்ற வேண்டும்.

         ஆனால் எந்த வித மென்பொருளும் இல்லாமல் யாருடைய உதவியும் இல்லாமல் நாமே பாஸ்போர்ட் அளவு போட்டோவை உருவாக்க இயலும் அதற்க்கு ஒரு இணையதளம் நமக்கு உதவுகிறது



இதோ அதற்க்கான சுட்டி : e-passportphoto

இந்த இணையத்தின் சிறப்பான விசயம் என்னவென்றால் இதில் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஏற்ற அளவில் பாஸ்போர்ட் ஒளிப்படங்களை உருவாக்க முடியும்.

பாஸ்போர்ட் ஒளிப்படங்கள் உருவாக்க :

1.மேலே குறிப்பிட்டு உள்ள இணையதளத்திற்கு சென்று Country என்ற பிரிவில் உங்கள் நாட்டை தேர்வு செய்யவும்.


2.Photo என்ற பிரிவில் வழக்கமான பாஸ்போர்ட் ஒளிப்படம் , விசா , PAN கார்டு என்ற மூன்று பிரிவுகளில் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.பின்னர் GET MY PASSPORT PHOTO என்ற பொத்தானை அழுத்தவும்.





3.அடுத்த பக்கத்தில் பிரவுஸ் (BROWSE) என்ற பொத்தானை அழுத்தி உங்களிடம் உள்ள போட்டோவை தேர்வு செய்யுது NEXT பொத்தானை அழுத்தவும்.

4.உங்கள் படம் அப்லோடு ஆனவுடன் உங்கள் ஒளிப்படத்தில் கிளிக் செய்து ட்ராக் செய்யுங்கள் ( CLICK AND DRAG ) உங்கள் முகம் நன்றாக தெரிகிற மாதிரி அந்த எடுத்துக்காட்டில் உள்ளது போல தேர்வு செய்து விட்டு NEXT கொடுக்கவும் .



5.இதில் PROFESSIONAL மற்றும் STANDARD ஆகிய சேவைகள் உள்ளன. நாம் கட்டணம் இல்லாமல் ஒளிப்படத்தை பெற NO THANKS என்பதைக் கிளிக் செய்தால் உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட் ஒளிப்படத்தை இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம்








! ! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! !



Friday, June 24, 2011

குறிப்பிட்ட நேரத்தில் ஐகானை மறைக்க மென்பொருள் ! ! ! !

0 comments
ப்ளிகேஷன்களை விரைவாக அணுகுவதற்காக டெஸ்க்டாப்பில் சாட்கட் ஐகான்களை உருவாக்கி பயன்படுத்தி வருவோம். பிடிக்கவில்லையெனில் ஐகான்களை நீக்கி விடுவோம். ஒருசிலரது கணினியில் பார்த்தால் டெஸ்க்டாப் முழுவதும் வெறும் ஐகான்களாக மட்டுமே இருக்கும்.

          பொதுவாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் சாட்கட் ஐகான்களை மட்டுமே டெஸ்க்டாப்பில் வைப்பது பயன்படுத்துவோம் . அவ்வாறு நாம் பயன்படுத்தும் ஐகான்களை மறைத்து வைக்கவும் முடியும். இதனால் கணிணியில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

       டெஸ்க்டாப் ஐகான்களை மறைத்துவைக்க விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதைவிட இந்த மென்பொருள் சிறப்பானது ஆகும்.





இதை பதிவிறக்க : AUTO HIDE DESKTOP ICONS


        மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பின் ஒப்பன் செய்யவும். அதில் நேரத்தை தெரிவு செய்து கொள்ளவும். பின் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் டெஸ்க்டாப் ஐகான்கள் மறைக்கப்படும். பின் மெளசால் கிளிக் செய்வதன் மூலமாக டெஸ்க்டாப் ஐகான்களை உங்களால் காண முடியும்.
         நீங்கள் உங்கள் சுட்டியால் கிளிக் செய்யும் வரை டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்கள் மறைத்தே வைக்கப்படும். நீங்கள் எப்பொழுது கிளிக் செய்கிரிர்களோ அப்பொழுது தான் அந்த மறைக்கப்பட்ட ஐகான்கள் தெரியும்.
    
        மேலும் டாஸ்க்பாரையும் மறைத்து வைத்துக்கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனை நிறுத்த வேண்டுமெனில் உங்கள் வலப்பக்கத்தில் உள்ள ஐகானை வலது கிளிக் செய்து Disable என்பதை தேர்வு செய்யவும். அப்போது அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷன் நிறுத்தி வைக்கப்படும்.

உங்கள் டெஸ்க்டாப்பை  அழகாகவும் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம் . இதை வைத்து உங்கள் நண்பர்களை டிரிக் செய்யலாம் .






! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! !



Thursday, June 23, 2011

ஒரு வருடம் இலவச களைக்கட்டு நிரல்(ANTIVIRUS) ! ! !

0 comments
நாம் நம் கணினியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றை பாதுகாக்க  ஒவ்வொரு களைக்கட்டு நிரலை பயன்படுத்துகிறோம் . அவ்வாறு பயன்படுத்தும் நிரல்களை நாம் சில இணைய தளங்களிளோ அல்லது சில கடைகளுக்கு சென்று அந்த களைக்கட்டு நிரலை வாங்கி வருவோம் . 

      சில நிரல்களை இணையத்தில் இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம் ஆனால் அவ்வாறு பயன்படுத்தும் சில மென்பொருள் வெறும் 30 நாட்களுக்கோ அல்லது 90 நாட்களுக்கோ இலவசமாக கிடைக்கும் .

       ஆனால் இப்பொழுது ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்துமாறு ஒரு அன்டி வைரஸ் மென்பொருள் வந்துள்ளது.






கொமோடோ இன்டர்நெட் செக்யூரிட்டி புரோ 2011 இந்த மென்பொருளானது ஓராண்டிற்கு இலவசமாக கிடைக்கிறது.



         இந்த மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும் பின் இந்த மென்பொருளை பயன்படுத்தி கொள்ளவும் . இணைய இணைப்பு இருக்கும் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய பாதுகாப்பு மென்பொருள் இது.

           ஏற்கனவே ஒரு அன்டி வைரஸ் மென்பொருளை பதிவிறக்கி இருந்தாலும் கூடுதலாக இந்த இணைய பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் . இது உங்கள் கணினியை மிக பாதுகாப்பாக வைத்திருக்கும்

     இந்த மென்பொருள் விண்டோஸ் ஏக்ஸ்.பீ , விஸ்டா ,7 இயங்கு தளங்களிலும் வேலை செய்யக்கூடியது ஆகும் .





! ! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! !



Monday, June 20, 2011

ஆற்றல்மிக்க பவர் டேட்டா மீட்ப்பு ! ! !

0 comments
ணினியில் பணியாற்றும் போது பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்து பயன்படுத்துவோம். அதுவும் ஒரு சில முக்கியமான கோப்புகளை தனியாக சேமித்து வைத்திருப்போம். 

    அவ்வாறு உள்ள தகவல்களை நம்மை அறியாமலோ அல்லது நம்முடைய கவனக்குறைவினால் நீக்கி விடக்கூடும் .

      அல்லது ஒரு சில நேரகளில் கணினியில் நம் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பணியாற்ற விடுவோம். ஆனால் அவர்கள் நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அளித்து விடுவார்கள் .அவ்வாறு இழந்த கோப்புகள் மிகவும் முக்கியமாக இருக்கலாம்.அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்காது.

      அவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டு எடுக்க ஒரு இலவச மென்பொருள் உதவுகின்றது.


 


இதை பதிவிறக்க : பவர் டேட்டா ரெகோவேரி


    மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.பின் இந்த செயலியை திறக்கவும் .அதில் தோன்றும் மெனுக்களில் நீங்கள் எந்த இடத்தில் கோப்பினை இழந்திர்கள் மற்றும் அது எந்த வகையான கோப்பு ஆகியவற்றைக் கவனமாய் கொடுக்கவும். பின் அந்த கோப்பினை மீட்டு எடுக்கலாம்.

    வன்தட்டு,பிளாஷ் டிரைவ் ,மெமரி கார்டு போன்ற இதர சாதனங்களில் இருந்து இழந்த கோப்புகளை நம்மால் மீட்டு கொள்ள முடியும்.



POWER DATA RECOVERY

இது விண்டோஸ் தளத்திற்கு ஏற்ற ஒரு மென்பொருள் .




! ! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! ! !




Tuesday, June 14, 2011

பாடல் தேட அறிய மென்பொருள் ! ! !

0 comments
ரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள் .  இதுப்போன்றவர்கள் , இணையத்தை நாடுவதே பாடலை கேட்கத்தான். இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வேண்டும் .





          இல்லையெனில் பதிவிறக்கம் செய்து பாடலை கேட்க வேண்டும் .ஒரு சில பாடல்களை இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது. 

     என்ன செய்வது என்று கடைசியில் கூகுளை தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறிர்களா இதோ அதற்க்கான ஒரு மென்பொருள்.




இதை பதிவிறக்க : வின்க்ரூவெஸ்



    இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு , இந்த மென் ஒருங்கினை திறக்கவும் .

வேண்டுமெனில் ஒரு பயனர் கணக்கை உருவாக்கி கொள்ளவும் . 

 பின் SEARCH FOR MUSIC என்ற செக்பாக்சில் வேண்டிய குறிச்சொல்லை இட்டு பாடலை தேடிப்பெறலாம் .




! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! !


Sunday, June 12, 2011

அரட்டை அடிக்க ஐ எம் ஓ ! !

0 comments
பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கின்றனர் . ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள் .

      இதனால் பணம் மட்டுமே செலவாகும் . இது போன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள் சான்றாக யாஹூ , ஸ்கைப் ,எம்.எஸ்.என் ,கூகிள் டாக் .

    ஒரு சில கணினியில் வரம்புக்கு உட்பட்ட பயனர் கணக்கில் பணியாற்றுவோம் . அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது.

         இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒரு தளம் உதவி செய்கிறது .


இந்த தளத்திற்கான முகவரி






     மேலே உள்ள தளத்திற்கு சென்று வேண்டிய இணையஅரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்து கொள்ளவும. பின்னர் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அரட்டை அடிக்கலாம் .



! ! ! மறக்காமல் வாக்களியுங்கள் ! ! !

Related Posts Plugin for WordPress, Blogger...
 

NUNUKKANGAL Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger

Blogger Widgets